பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

உண்டான் என்னும் வினைப் பகுபதத்தில் உண் என்னும வினைச்சொல் பகுதியாகும். வினைப் பகுதி யால் செயலே அறியலாம். வினேப் பகுதிகள் சவலாக கிற்கும். -

விகுதி பகுபதத்தின் ஈற்றில் நிற்கும் உறுப்பு, விகுதி எனப்படும்.

(உ-ம்) கூணன் = கூன் + அன் + (அன் விகுதி

ஆண் இனத்தை உணர்த்துகிறது) கூனி = கூன் + இ (இ விகுதி பெண்

இனக்கை உணர்த்துகிறது) கூனர் = கூன் + அர் (அர் விகுதி

பலரை உணர்ததுகிறது) இவ்வாறு விகுதிகள் பலவகைப்படும். சொற்கள் விகுதியினுல் பொருளில் மாறுபடுவதை அறிக.

ஆண் மக்கள உணர்த்தும் விகுதிகள் : அன், ஆன், மான் முதலியன. (உ-ம்) பொன்னன், செய் தான், கோமான்.

பெண் மக்களே உணர்த்தும் விகுதிகள் அள், ஆள், இ முகலியன. (உ-ம்) குழையள், வந்தாள், பொன்னி.

பலரைக் குறிக்கும் விகுதிகள அர், ஆர். கள், மார். (உ-ம்) குழையர், செய்தார், குரு ககள், குருமார்,

ஒரு பொருளைக் குறிக்கும விகுதிகள் : து, று, (உ-ம்) அது, வந்தது, ஒடிற்று.

பல பொருளைக குறிக்கும் விகுதிகள் : வை, அ, ஆ என்பன.(உ-ம) அவை, செய்தன, கடவ.

குறிப்பு:- விகுதியால் பால், எண், இடம் இவைகளே அறியலாம்;

இதைப்பற்றிப் பின்னர்த் தெரிந்துகொள வீர்கள்.