பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பொன்னன், மதுரையான் சித்திரையான், கண்ணன், கல்லோன், ைட ய ன் என்பன வினைமுற்ருக வராமல் தனிப்பெயராக இருக்கும் போது அவைகளைக் குறிப்புப் பெயர் எனக் கூறலாம். பொதுக் குறிப்பு: பாட இயலில் குறிப்புப் பெயரை Pronoun (பிரதி பெயர்ச்சொல்) என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்க. திணை :

கண்ணப்பர் சிறந்த அன்பர். சிதம்பரத்தில் நடராசர் எழுந்தருளியிருக்கிருரர். யான பெரிய மிருகம். இந்தக் கல் கனமானது. இவ்வாக்கியங்களில் கண்ணப்பர் எ ன் னு ம் சொல் மக்களில் ஒருவர் பெயரையும், நடராசர் என்னும் சொல் ஒரு கடவுளின் பெயரையும், யானே என்னும் சொல் ஒரு மிருகத்தின் பெயரையும், கல் என்னும் சொல் ஒரு உயிரில்லாப் பொருளின் பெயரையும் உணர்த்துகின்றன. மக்களும் தேவர் களும் பகுத்தறிவு உள்ளவர்களாகலால், இவர்களே உயர்ந்த குலமாகவும், மற்ற உயிருள்ளவும் உயி ாற்றவுமான பொருள்களை உயர்வல்லாத குலமாக வும் கூறப்பெறும். ஆகலால்,

உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் தமிழ் இலக்கணத்தில் உயர்திணை, அஃறிணை என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பு : திணை = கலம், வகுப்பு. உயர் 'ன - உயர்வாகிய திணை. அஃறிணை (அல் - திணை) - உயர்வு அல்லாத திணை. உயர்திணை : மக்களையும் தேவர்களையும் குறிக்கும் சொற்கள் உயர்திணைப் பெயர்கள் ஆகும்.

(உ-ம்) கோவலன், க ண் ண கி, மனிதன், அரசன் - மக்கள் பெயர்கள்.

இந்திரன், கலைமகள் - தேவர் பெயர்கள்.