உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் எனப் பால் ஐந்து வகைப்படும். குறிப்பு : ஆண்பால், பெண்பால், பலர்ப்ால் இப் மூன்றும். உயர்திணைக்குரியன; ஒன்றன்பால், பலவின்பால் இவ்விரண்டும் அஃறிணைக்குரியன.

ஆண்பால் : உயர்திணேயில் ஒர் ஆணேக் குறித்து கிற்குஞ் சொல் ஆண்பால் ஆகும்

(உ-ம்) கோவலன், அரசன், உழவன் , சிறுவன். பெண்பால் : உயர்திணேயில் ஒரு பெண்ணேக் குறித்து கிற்குஞ் சொல் பெண்பால் ஆகும். (உ-ம்) சீதை, அரசி, உழத்தி, சிறுமி. பலர்பால் : உயர்திணேயில் பலரைக் குறித்து கிறகுஞ் சொல் பலர்பால ஆகும்.

(உ-ம்) மக்கள அரசர்கள், உ ழ வ ர் க ள்,

சிறுமிகள். குறிப்பு : உயர்கிணையில் ஆளுயினும், பெண் .பினும், இவ் விருவா கலந்தாயினும் ஒருவருக்கு மேறபட்டவா பலர்பாலே யாவர்.

ஒன்றன்பால் : அஃறிணையில் ஒரு பொருளைக் குறித்து கிற்குஞ் சொல் ஒன்றன்ப்ால் ஆகும்.

(உ.ம்) பசு, புரு, சேவல், புத்தகம். குறிப்பு : அஃறிணையில் சில உயிருள்ள பொருள்களுக்கு ஆண், பெண் என்ற பிரிவு இருந்தாலும, அவை ஆண்பால், பெண்பால் என வழங்கப்படுவது இல்லே. ஆகவே இவற்றைப் பால் பகா அஃறிணைப் பெயர்கள் என்பர்.

பலவின் பால் : அஃறிணேயில் பல பொருள்களைக் குறித்து கிற்குஞ் சொல் பலவின் பால ஆகும்.

(உ.ம்) மாடுகள், கோழிகள், மலைகள், மரங்கள்.