பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

எழுத்துக்களின் வகைகள் : அக்கா என்னும் சொல்லில், -

அ இந்த எழுத்தைத் தனித்து உச்சரிக்கிலாம்.

இது உயிர் எழுத்து எனப்படும். க் இவ் வெழுத்தைத் தனித்து உச்சரிக்க

முடியாது. இது மெய்யெழுத்து எனப்படும். கா (க்+ ஆ)-க் என்னும் மெய்யெழுத்துடன் ஆ என்னும் உயிர் எழுத்து சேருவதால் கா ஏற்படுகிறது. இது உயிர்மெய்யெழுத்து எனப் படும். இஃது இதில் ஃ ஆய்த எழுத்து எனப்படும்.

இவ்வாறு ಶ್ಗ ஒலி வேறுபாடு கஇளக்கொண்டு த ழ் எழுத்துக்களைப் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிப்பது வழக்கம்.

1. உயிரெழுத்து : உயிர் பிற ஒன்றின் துணே இல்லாமல் தனியே இயங்கவல்லது. அதுபோலவே, தமிழில் சில எழுத்துக்கள் பிற எழுத்துக்களின் உதவியில்லாமல் இ ய ங் க வ ல் ல ன. அவை உயிரெழுத்துக்கள் எனப்படும்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள-என உயிரெழுத்துக்கள் 12 ஆகும்.

2. மெய்யெழுத்து : மெய் என்னும் சொல்லுக்கு உடம்பு என்பது பொருள். உடம்பு உயிரில்லர் விட்டால் அசைவற்றுக் கிடக்கும். அவ்வுடம்பு கடமாடவேண்டுமானல், அதற்கு உயிரின் உதவி தேவையாகும். அ. து பே ல வே தமிழில் சில எழுத்துக்கள் உயிரெழுத்தின் உதவியின்றித் தனித்து ஒலிக்கமாட்டா. மெய் (உடம்பு) போலுள்ள இவ் எ ழு த் து க் க ள் மெய்யெழுத்துக்கள் எனப் படுகின்றன.