பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

WI. நிறுத்தற் குறிகள் எழுதுவதில் நிறுத்தற் குறிகள் இடுவதின் தேவையையும். முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, வினுக் குறி, உணர்ச்சிக் குறி இவை களின் உபயோகத்தையும் முந்திய ப டி வ த் தி ல் படித்திருக்கிறீர்கள். அவைகளை மறுபார்வையாக அறிவதுடன், மேலும் சில நிறுத்தற் குறிகளைப் பற்றி இங்கு அறிவோம்.

இது முற்றுப்புள்ளி. செய்தி வாக்கியங்களின் இறுதியிலும், கட்டளை வாக்கியங்களின் இறுதியி லும் இக் குறியை இடவேண்டும். முற்றுப்புள்ளி இடப்பட்ட இடங்களில் நான்கு மாத்திரை நேரம் கிறுத்தவேண்டும்.

(உ-ம் ) பாகன் சித்திரகூடம் சென் முன்.

இளமையில் கல். சொற்களின் சுருக்கமாக எழுத்துக்களே உபயோகிககும்பொழுது அவ்வெழுத்துக்களின் பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.

(உ-ம் ) ம. த. சுந்தரம் பிள்ளை, எம். ஏ. மன்னர்குடி என்பதன் சுருக்கம் ம. தங்கவேலுப் பிள்ளையின் சுருக்கம் த. ஆகவே, இாண்டுக்கும் பின்னர் முற்றுப்புள்ளி இடப்பட்டிருக் கிறது.

இஃது அரைப்புள்ளி. இப்புள்ளி இடப் பட்டுள்ள இடங்களில் இரண்டு மாத்திரை கேரம் நிறுத்தவேண்டும் ஒரே எழுவாயைக்கொண்ட பல வாக்கியங்கள் அடுத் தடுத்து வ ரு மி ட ங் க ளி ல் ஒவ்வொரு பயனிலையின் கடைசியிலும் அரைப் புள்ளி இடுதல்வேண்டும்.

(உ-ம்) (i)அநுமான் இலங்கைக்குச் சென் முன்; சீதையைக் கண்டான்; இராமரிடம் திரும்பினுன்.