பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.தர்மம் தான் வெற்றி பெறுகிறதா?

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை “அவளும் அவனும்” எனும் கவிதை காவியம் எழுதியிருந்தார், அதைப் பார்த்த நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அதைப் போல் ஒரு காவியம் எழுதுமாறு கேட்டுக் கொண்டேன்.

கவிஞர் “பாண்டியன் பரிசு” என்ற காவிய நூலை எழுதினார். அது அச்சிட்டு வெளிவந்தது. அந்த நூலின் முதற் பக்கத்தில் “பாண்டியன் பரிசு” முகப்பு அட்டைப் படத்தையும் பின்புறத்தில் பாண்டியன் பரிசு பற்றிய விவரமும் எழுத நினைத்திருந்தேன். அப்போது புதுமைப்பித்தன் அவர்கள் முல்லைப் பதிப்பகத்துககு வந்தார். மேற்படி விவரத்தைச் சொல்லி, பாண்டியன் பரிசு நூலை அவர் கையில் கொடுத்து சிறு விளக்கம் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டேன். 1946-ல் நடந்தது. மேற்படி குறிப்பு கிடைக்கவில்லை.

அதன் கருத்து :

பாரதிதாசனுக்கும் ஏனைய கவிஞர்களைப் போல முடிவில் தர்மம் தான் வெற்றி பெறுகிறது. உலகில் தர்மா தர்ம பிரச்சனைகளில் அப்படித்தானா? என்று அந்தக் குறிப்பில் கேட்டிருந்தார், புதுமைப்பித்தன் எழுதிய குறிப்பை பாரதிதாசனிடம் காண்பித்தேன்.

8