பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போகவில்லை. அவருடைய தனித்தன்மையை நான் அப்போது உணர்ந்தேன்.

நாதஸ்வரம் வாசிக்கக்கூடாதா?

புதுமைப்பித்தன் ராயப்பேட்டை நெடுஞ் சாலையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் ஒரு சமயம் தவில் நாதஸ்வரம் முதலானவை இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவை என்ன என்று கேட்டபோது நாதஸ்வரம் வாசிக்கக் பழகிக் கொள்கிறேன் என்று கூறி, ராஜரத்தினம் பிள்ளை கட்டுரை எழுதும் போது நான் ஏன் நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது என்று கேட்டு விட்டுச் சிரித்தார்.

ஓட்டல் சாப்பாடு

புதுமைப்பித்தனும் அவர் மனைவியும் பெரும்பாலும் ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள்.

“நெருப்பைத் தருவேன்”

ஏ. கே. செட்டியார் ‘குமரி மலர்’ பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புதுமைப்பித்தனிடம் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார்.

அதற்கு, புதுமைப்பித்தன் ‘நான் நெருப்பை அல்லவா அள்ளித் தருவேன்’ என்றார்.

‘சரி கொடுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்’ என்றார் ஏ. கே. செட்டியார்.

10