பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்பவரும் உதவியாசிரியராக இருந்தார். சிறிது காலம் வேலை பார்த்தபின் புதுமைப்பித்தன் ஊழியனிலிருந்து வெளியேறி விட்டார். அப்போது புதுமைப்பித்தனைச் சந்தித்த வ.ரா., ஈசிவம் எப்படியிருக்கிறார்” என்று கேட்டார். அவர் ஈசிவமாயிருந்தால் தேவலை. எறும்பு சிவமாயிருந்து என்னைப் பிடுங்கி விட்டார்.” என்றார் புதுமைப் பித்தன்.

நந்தன் சிதம்பரத்துக்கு...

புதுமைப்பித்தன் அடிக்கடி தம் சொந்த ஊருக்குப் போவது வழக்கம், நாள் ஒன்று குறிப்பிட்டு விடுவார். அந்த நாளில் போக செளகரியப்படாமல் ஏதாவது தடை ஏற்பட்டுவிடும். “ஊருக்குப் போவதாகக் சொன்னீர்களே ஏன் போகவில்லை” என்று யாரேனும் கேட்டால் “நந்தன் சிதம்பரத்துக்குப் போன மாதிரிதான் நான் ஊருக்குப் போவது” என்பார் புதுமைப்பித்தன்.

முன்பாரா பின்பாரா

புதுமைப்பித்தனுடன் தோழர் ரகுநாதனும் நானும் (முல்லை முத்தையா) ஒரு சமயம் காலையில் ஒய். எம். ஐ. ஏ. க்குச் சென்றோம்; சர்வரைப் பார்த்து, இட்லி கொண்டு வரும்படி சொன்னார் புதுமைப்பித்தன். சிறிது நேரம் ஆகும் என்றார் சர்வர். “அப்போது முதலில் காபி கொடு, பிறகு இட்லி கொண்டு வா, அப்புறம் ஒரு காபி, முன்பாரா பின்பாராவுடன் இட்லி உள்ளே செல்லட்டும்” என்றார் புதுமைப்பித்தன்.

12