பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இது உங்களுக்குத்தான்...

எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் உள்ள, உறவு நிலைமையைப் பற்றி ஒரு சமயம் பேச்சு எழுந்தது. அதற்குப் புதுமைப்பித்தன், “எந்தப் பதிப்பாளர் வந்தாலும் இதை உங்களுக்காகத்தான் எழுதி வைத்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்; பணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ அவர்களிடம் ‘ஸ்கிரிப்ட்’டைத் தூக்கிக் கொடுத்து விட வேண்டும். அதாவது எழுத்தாளன் தாசியைப் போல் இருக்க வேண்டும்” என்றார்.

ஆத்மாவின் குளிர்ச்சி

புதுமைத்பித்தன் தினமணியில் இருந்த சமயத்தில் அவரும் இன்னும் சில நண்பர்களும் ஹோட்டலுக்குச் சென்றார்கள். சூடாக இட்லி, சாம்பார் கொண்டு வரும்படி சர்வரிடம் சொன்னார் புதுமைப் பித்தன். இட்லி, சாம்பார் வந்தது. இட்லியைத் தொட்டுப் பார்த்துவிட்டுப் புதுமைப்பித்தன் சொன்னார் : “என்னப்பா ஆத்மா குளிர்ந்து விட்டதே” என்றார். (இட்லி ஆறிப் போயிருந்தது -சாம்பார் சூடாக இருந்தது.)

ஊர் திருநெல்வேலியா?

தமிழில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ஒரு கவிஞரைக் கண்டு, ரசிகமணி டி.கே.சி. ‘உங்களுக்கு ஊர் திருநெல்வேலியா?’ என்று கேட்டிருக்கிறார். இல்லை, ‘எனக்கு ஊர் மதுரை’ என்று சொல்லி

18