பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போவாய், தண்ணீரைக் குடித்துவிட்டு, வெற்றிலை எல்லாம் போட்டுக் கொண்டு ஆனந்தமாகத் தூங்கி எழுந்திருப்பேன்” என்றார்.

வாழ்த்து அல்ல - வணக்கம்!

மரபு, பண்பு இவை சரிவரத் தெரியாமல் கவிதைகள் எழுதி வருகிறார்கள் என்பதைப் பற்றி புதுமைப்பித்தன் ஒரு சமயம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஒரு கவிஞரைப் பற்றி வெளிவந்த தொகுப்பு நூலைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட கவிஞர் ஒருவருக்குச் சிஷ்யர் என்ற கவிஞர் ஒருவரும் அவரைப் பாராட்டி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதில், ‘...எந்தன் ஆசான், பீடெல்லாம் பெற்று வாழ்க!’ என்று இருந்தது. ஆசானுக்கு வாழ்த்துக் கூறுவதில்லை. வணக்கம் தான் கூற வேண்டும். இதைச் சொல்லுங்கள் அந்தக் கவிஞரிடம்!” என்றார் புதுமைப் பித்தன்.

தலைப்பாக் கட்டாதீர்

புதுமைப்பித்தன் வீட்டிலே ஒரு முறை பலர் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர், 'தான் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பதாகவும் அந்தப் பணம் வந்ததும் தன்னுடைய சொந்த உபயோகத்துக்கு ஒரு கார் வாங்க எண்ணியிருப்பதாகவும்' கூறினார். அவர் ஒரு வியாபாரமும் செய்யாமல் வெறுமனே இருப்பவர். பணம் வந்தால் ஏதேனும் ஒரு வியாபாரத்தில் ஈடுபடாமல்,

20