பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புதுமைப்பித்தன் எழுதிய கதை கட்டுரைகளில் மூழ்கி எடுத்த முத்துக்கள்...


அங்கிகரீக்கப்படும் பொய்

நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடு விட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும். பொய்; அதாவது-கடவுள், தர்மம் என்று பல நாம ரூபங்களுடன், உலக ‘மெஜாரிட்டி’யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனாலோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள் இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள்.


மனதின் மகிழ்ச்சி

பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள் தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன் சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக் கொண்டு போகும் தன்னுடைய நளபாக

25