உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாதுர்யத்தைப்பற்றி இவள் மனசு கும்மாளி போடுகிறது போலும்!

வெட வெடப்பு

என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக் கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால், வெட வெடப்புக்கு வரம்பு உண்டா?

யாரிடமும் சொல்ல முடியுமா?

தன் மனைவி........ போகிறாள் என்ற மனக் கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா?

வம்ச விருத்தியின் சிறப்பு

அவருக்கு ஒரு புதல்வி. எந்த மதத்தினரானாலும், உபாத்தியாயர்களுக்கு மட்டும் வம்ச விருத்தியில் தனிச் சிறப்பு உண்டு.

யாருக்கு விதிவிலக்கு?

வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால், இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை; பகைமை ஏற்படுவதும் சகஜம். இவை இரண்டும் அற்று இருப்பது விதிக்கு விலக்கு.

உடனே கவனிக்கக் கூடியவர்கள்

உணர்ச்சி விஷயங்களில், இனிமேல் என்ற பிரச்சினையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக்

27