பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடியவர்கள், தன்னை ஒப்பு க்கொடுப்பது, தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண்மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங் காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்து விடுகிறார்கள் அப் பெண்கள்.

எது கோழைத்தனம்?

ஆபிஸிற்கு வந்து விடுவது என்றால், அது வீட்டுத் தொந்தரவுகளை எல்லாம் ஒரு பெண்ணின் தலையில் போட்டுவிட்டு, அங்கு வந்து ஒளிந்து கொள்ளும் கோழைத்தனம் என்று பட்டது.

சந்நியாச உலகம்

வீட்டிற்குப் போவதற்குக் கூட மனமில்லை. கையில் பணக்கஷ்டம் ஏற்பட்டு விட்டால், சந்நியாச உலகம் மோட்ச சாம்ராஜ்யமாகத் தோன்றும்.

பட்டணம் எப்படி மாறுகிறது?

சாயந்திரமாகி விட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போக வேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறிவிடுகிறது.

குழந்தை செய்த தானம்

அவன் குழந்தை கொடுத்ததைச் சட்டென்று வாங்கிக் கொண்டான். அது ஒரு புதுத் தம்படி கோடீசுவரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப்

27