பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிணியைப் போக்கிவிட முயல்வதுபோல் கடலில் காயம் கரைத்து வாசனையேற்றி விட முயலுவது போல், குழந்தையும் தானம் செய்து விட்டது.

உபவாச மகிமை

கொழும்புக்குப் போவதென்றால் மேல்துண்டுடன், அதையே துணையாக நம்பிச் செல்லுகிறவர்களுக்கு உபவாச மகிமைதான் ஸ்டேஷனில் காத்திருக்கும்.

தெய்வபக்தி அவசியமா?

வர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம்.

பக்திப் பெருக்கு

தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு டைபாயிட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகி விகிதத்திற்கு மோசமாகி விடவில்லை .

எரிமலையின் சீற்றம்

மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல. அவர் மனசில் எரிமலைகள் சீறின; புதிய சமூக சாஸ்திரங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தோன்றின.

28