பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருட்டுக் கூட்டமா?

இந்த எழுதுகிற பயல்கள் எல்லோரும், திருட்டுக் கூட்டம், சொன்னாச் சொன்னபடி நடக்கமாட்டான்கள்; பொஸ்தகக் கடை வைக்கிறதை விடப் பொடலங்காய் விக்கலாம்.

முயல் எப்படி இருக்கும்?

இந்தக் கறுப்புக் குட்டி ...... நாய்; அதிலும் பட்டணத்து ...... நாய். அதற்கு முயல் என்றால் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. மேலும் அது எழுத்தாளர் அல்ல; சொந்த மனசினாலோ, இரவல் விவகாரத்தினாலோ கற்பனை பண்ணிக் கொள்வதற்கு அதற்குச் சக்தி இல்லை.

புளுகுவதுதான் கதையா?

சிறு கதை பற்றி : ‘பயன் கருதாது, தன்மயமாகி லயித்து ஒட்டிப் புளுகுவதுதான் கதை’

சிறிய சாளரம்

‘சிறு கதை வாழ்க்கையின் சிறிய சாளரம்’

வாழ்வுக்குப் பொருள் கொடுப்பது எது?

வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மானித்துக் காண்பித்தது. சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர் நின்று நோக்க ஆரம்பித்தன.

59