பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புதுமைப்பித்தன் எழுதிய கடிதம்


பலர் கடிதம் எழுதுகிறார்கள். நீண்ட கடிதங்களே எழுதுகிறார்கள். ஆனால் சிலருடைய கடிதங்கள்தாம் இலக்கியமாக அமைகின்றன. அத்தகைய அருமையான கடிதம் இது; கவிதை என்றால் ‘ஆஹா’ என்று கூச்சலிடுவது மட்டுத் தான் என்ற அபிப்பிராயம் பலரிடையே இருந்து வருகிறது. இலக்கியத்தில், முக்கியமாக, கவிதையில் அமைதியும் உருவமும் அற்புதமான அம்சமாகும். இளவேனில் என்னும் கவிதை நூலைக் குறித்து ‘சொ. வி.’ எழுதிய இக்கடிதத்தை மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கிறோம்.

170. ராயப்பேட்டை ஹைரோடு,

ராயப்பேட்டை

3–7–46

அருமைச் சோமையாவுக்கு,

இன்று மத்தியானந்தான் இளவேனில் பருவத்தைக்கூட பார்ஸல் செய்யக்கூடிய கெட்டிக்காரர்கள் திருச்சியில் உண்டு என்பதை அறிந்தேன். Surprise Packet கிடைத்ததும், மத்யானம் முழுவதும்

61