பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸினிமாத் தொழிலுக்கு கல்தா கொடுத்து விட்டு, உட்கார்ந்து விட்டேன். ‘வீசுதென்றலும் வீங்கின வேனிலும்’ என்ற வரியை நினைப்பூட்டும் படியான தலைப்பு. அந்தப் பாட்டின் இனப் பிரிவுகளின் விரிவான காட்சிகள் இந்தச் சிறு கனவுக் குவியல் என்று முதல் வாசிப்பில் பட்டது. ‘என்ன ஸோமு ஸார், பாட்டு நேர்த்தியாக இருக்கே’ என்ற ரகமான அபிப்பிராயம் உன்னை insult செய்வதற்கு ஒரு வழி. அந்த வழியை விட்டு ருத்திரசன்மனாக உட்கார்ந்து கொண்டு பார்ப்போம் என்றால்......

வண்ண மதுக்கிண்ணம்
வார்த்த கவிதையெலாம்
எண்ணக் குகையினிலே
எதிரொலித்து விம்முதடா

என்றுதான் சொல்ல வேண்டும். வசனத்தில் அமையவில்லை.

முடியாதது என நான் நினைத்திருந்த ஒரு கலவை அது. பொதியை, மதுக்கிண்ணம் சிக்கந்தர், சின்னக் குயிலி, மாரணம், மன்மதன், எத்தனை எத்தனை படங்கள்.

“In Xanadu did Kublaikhan.” என்று தொடங்கும் அடிகளை நினைத்துப் பார்.

Caverns measureless to Meri.........

Where Damsel with a dulcimer.........

எண்ணிக் கனவுகளை வாரிச் சொரியும் பாட்டுக் குவியல் இது.

62