பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாட்டுக்கள் முச்சூடும் ஒரே அமைதியில் மனசின் ஆழத்தில் உள்ள ஏக்கத்தின் எதிரொலியாக அமைந்திருப்பது, நினைவின் கோடியிலே மறைந்தும் மறையாது நின்றிருக்கும் துயரத்தின் பிரதிப்பலிப்பாகத் தென்படுகிறது. உனக்கு இந்த மாதிரி ஏக்கம் வரக் காரணம் என்ன? வெறும் Artists Pose என்று சொல்லுவார்களே அதுவா என யோசித்தேன். அதுவல்ல; சூழ நிற்கும் வரட்டுத் தவளைக் கவிதைகள் மனசை நிலைதடுமாறச் செய்வது இயல்பு தானே.

இது நன்றாக இருக்கிறது என ஒன்றை மட்டிலும் சுட்டிக் காட்ட எனக்குத் தெரியவில்லை. பொருளைக் கரைக்கும் பொதியைக்கும் இழுத்துச் செல்லும் இந்தப் பாட்டுகள், கவிதையிலே ஒரு புதிய துறையை இயற்றுகின்றன. இதுவரை சரிவர புரிந்து கொள்ளாமல் பாரதியின் எதிரொலிச்சான் கோவில்களாக, அல்லது Frustration Complex ஐ பரிபூரணமாக கசப்புக்குன்றாமல் சொல்லக் கூடி திறனில்லாத ‘கவிஞர்’ கூட்டங்கள், யாப்பு என்ற வாணலி (இருப்புச் சட்டியில்} வார்த்தைகளைப் போட்டு வறுத்து கருக்கி எடுத்து வைப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஒரு Personality ஐ Reveal செய்யும் பாட்டுகள் கோவையாக ஒரு புதிய துறையை இலக்கியத்தில் ஏற்படுத்துகிறது என்றால் அது நம் அதிர்ஷ்டந்தான். தமிழ் வழக்கொழிந்த மொழியாகிவிடுமோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத விரும்பிய எனக்குக் கொடி

63