பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு

தென்னாற்காடு மாவட்டத்தில் நிலப்பதிவு தாசில்தாராக இருந்த திரு. சொக்கலிங்கம் பிள்ளைக்கு, 1906-ம் வருஷம் ஏப்ரல் மாதம் திருமகனாக புதுமைப்பித்தன் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார்.

புதுமைப்பித்தனின் பூர்வீகம் திருநெல்வேலி ஜில்லா.

புதுமைப் பித்தனுக்கு பெற்றோர் இட்ட பெயர் விருத்தாசலம்.

புதுமைப்பித்தன் கல்லூரியில் படித்து பி. ஏ. பட்டம் பெற்றவர்.

தன் தகப்பனாரைப்போல் அரசாங்க உத்தியோகத்தில் ஈடுபட ஆசைகொள்ளாமல் எழுத்தாளராகிவிட்டார்.

1931-ம் வருஷம் திருவனந்தபுரம் திரு. பி.டி. சுப்பிரமணிய பிள்ளையின் குமாரத்தியைப் புதுமைப்பித்தனுக்கு மனம் செய்வித்தனர்.

புதுமைப்பித்தன் ‘மணிக்கொடி’ பத்திரிகைக்கு கதைகள் அனுப்பி, அதன் மூலம் பேராசிரியர்

5