பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x




இந்த நூல் - புதுமைப்பித்தனின் சொந்தக்கதைகளைக்கூட தழுவல் கதைகள் எனக்கூற முற்பட்ட முயற்சிகளை ஆதாரபூர்வமாக ஆராய்ந்து, அத்தகைய கூற்றுக்கள் எத்தனை பொய்யானவை என்பதை நிரூபிக்கிறது. - * 'புதுமைப்பித்தன் மீது தழுவல் இலக்கிய கர்த்தா என்ற முத்திரை குத்துவதற்காக எவ்வாறு சில உண்மைகள் திரித்தும் மறைத்தும் கூறப்பட்டுள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. விமர்சனம் என்ற பெயரால், புதுமைப்பித்தனின் சிறப்பையும் 'சாதனைகளையும் குறைத்து மதிப்பிட்ட விஷமத்தனங்களை எடுத்துக்காட்டுகிறது. . இந்த விமர்சனங்களும் விஷமத்தனங்களும் கடந்த அறுபதாண்டுக்காலத் தமிழ் இலக்கியப் போக்குகளோடும் வளர்ச்சியோடும், அரசியல், சமூக, - பொருளாதார இயக்கங்கள் மற்றும் மாற்றங்களோடும், இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய கருத்துப் போராட்டத்தோடும், ஒரு விதத்தில் இலக்கிய வர்க்கப் போராட்டத்தோடும் - சம்பந்தப்பட்டவை என்பதைச் சுட்டுகிறது.

  • 'மணிக்கொடி'ப். பத்திரிகையையும், அதில் எழுதிவந்த

எழுத்தாளர்களையும் வரலாற்றியல் பார்வையில், புதிய கோணத்தில் மறுமதிப்பீடும் மறுபரிசீலனையும் செய்கிறது. . * புதுமைப்பித்தனின் தனித்தன்மையையும் தனிப்பெரும் சிறப்பையும் விரிவாக ஆராய்ந்து கூறுகிறது. '* 'மணிக்கொடி காலத்துக்குப் பின்னர், தமிழ்ச் சிறுகதை உலகிலும் தமிழ் நாட்டிலும் நிகழ்ந்து வந்துள்ள மாற்றங்களை விவரித்து, அவற்றின் பின்னணியில், - மேற்கூறிய விமர்சனங்களுக்கும் 'விஷமத்தனங்களுக்குமான காரணங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறது. - - புதுமைப்பித்தன் ரசிகர்களும், தமிழ் - எழுத்தாளர்களும் வாசகர்களும் பல புதிய செய்திகளையும் விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.