பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைப்பித்தன் கதைகள் விமர்சகர்களும் கணிப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை ," | மேற்கண்ட வரிகள் புதுமைப்பித்தனைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டையே, - அவருக்கு உரிய அங்கீகாரத்தையே வழங்கியுள்ளன என்று கூறத் தோன்றுகிறது. இல்லையா? ஆனால், ‘காலமும் விமர்சகர்களும் கணிப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை ', என்ற அந்தக் கடைசி வார்த்தைகளில் கரந்து மறைந்து இருக்கின்ற உண்மை என்ன? நாம் எத்தனையோ முறைகளில் எவ்வளவோ பாடுபட்டும், இல்வாறு கணிக்கப்படுவதை இறுதியில் - - தவிர்க்க - முடியாமல் போய்விட்டதே என்ற அங்கலாய்ப்போடு, க.நா.சு:- தமது தோல்வியைத் தாமே ஒப்புக் கொள்ள நேர்ந்துவிட்ட பரிதாபத்தையே இந்தக் கடைசி வார்த்தைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன என்பதே அந்த உண்மை. புதுமைப்பித்தன் தமக்கே உரிய வைரம் பாய்ந்த சொல்லாட்சித்திறன், எழுதும் கதைகளின் காலம், களம் பாத்திரங்கள் ஆகியவற்றுக்கேற்பக் கையாளுகின்ற மொழிநடை, கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தனித்தன்மை, சமுதாயச் சிறுமைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராகச் சாட்டையடிபோல் எழுப்பும் கலகக் குரல், அங்கதத்திறன், வாழ்க்கையை எதார்த்தபூர்வமாகவும், விமர்சனப் பார்வையோடும் சித்தரிக்கும் 'பாங்கு, கதையின் வடிவ அமைப்பில் பலப்பல புதுமைகள் முதலிய பல்வேறு சிறப்புக்களால், தமது காலத்தைச் சேர்ந்த ஏனைய சிறுகதை ஆசிரியர்கள் - அனைவரிலிருந்தும் வேறுபட்ட, மாறுபட்ட, ஈடிணையில்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவராக விளங்கினார் என்பதை விருப்பு வெறுப்பற்ற பாரபட்சமற்ற கதாசிரியர்களும், விமர்சகர்களும், - வாசகர்களும் ஒப்புக் கொள்ளவே செய்வர்: ஆனால் க.நா.சு.வும், அவரது சகபாடிகள் சிலரும், - புதுமைப்பித்தனின் இந்தத் தனிச்சிறப்பைப் புரிந்து கொள்ளவும் ஏற்கவும் முன்வராமல், முப்பதுகளில் எழுதிவந்த சிறுகதை ஆசிரியர்களில் புதுமைப்பித்தனைக் காட்டிலும் திறமை மிகுந்த, அதிகமான சாதனைகள் புரிந்த சிறந்த கதாசிரியர்கள் சிலர் இருக்கவே செய்தனர். என்று வலியுறுத்தி, விமர்சனம் என்ற பெயரால் விஷமத்தனங்கள் புரிந்து, புதுமைப்பித்தனைப் பற்றிய சரியான