பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

200 புதுமைப்பித்தன் கதைகள் தெரியுமா? ' 1947க்கு மேல் இன்றுவரை ஒரே தேக்கம் என்று க.நா.சு. - தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிபற்றி எழுதிய கட்டுரையொன்றிலுள்ள வாசகத்தை மேற்கோள்காட்டி, இந்த வரிகள் என் வேலையைச் சுளுவாக்கிவிட்டன....'சட்டி அளவுக்குச் சாப்பாடு' என்ற ரீதியில் ருசியைப் பற்றிய புலன் உணர்ச்சி இல்லாமல், எழுதப்படுவதெல்லாம் இலக்கிய மதிப்பு உள்ளவை என்று முன்கூட்டியே ஒரு அபிமான இலேசாஸ்பத (sentimental) தீர்மானத்துடன் வரவேற்கும், பகுத்தறிகிற சக்தி ஏதும் இல்லாத ஒரு சுபாவம் பரவி இருப்பதன் விளைவாகும். இந்த வளமை குன்றிய தேக்கம் என்றே எழுதியுள்ளார் (சுதேசமித்திரன் தீபாவளி மலர் 1956). ' இவ்வாறு செல்லப்பா எழுதியதை ஆட்சேபித்து, அன்றைய சிறுகதை எழுத்தாளர்கள். சிலர் எழுதினர். அவர்களில் ஒருவர். செல்லப்பாவின் கட்டுரையைப்பற்றி பி.எஸ். ராமையாவுக்கே ஒரு கடிதம் எழுதினார்; அந்தக் கடிதத்துக்கு ராமையா எழுதிய பதிலின் ஒரு பகுதி சுதேசமித்திரனிலேயே வெளிவந்தது. அதில் 'காலச்சக்கரம் சுற்றும்போது இலக்கியப் படைப்புக்களின் வடிவம், கனம், ஆழம் எல்லாம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அவற்றை எடைபோட, உரைத்துப் பார்க்க படிக்கல் உரைகற்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்ற உண்மையை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. செல்லப்பாவும் அவருக்கு ஆதர்ச உண்மை காட்டிய க.நா.சு.வும் இந்த நிலையை அடைந்துவிட்டதைக் கண்டு எனக்குச் சிறிது வருத்தம்தான் என்று சொல்லி, இலக்கிய விமர்சனம் செய்யப் புறப்படுகிறவனுக்கு. ஓரப்பார்வை இருக்கக்கூடாது. ஆனால் விமர்சகனும் - மனிதன்தானே. செல்லப்பாவும் அத்தகைய ஒரு மனிதன்தான் என்று அவர் கட்டுரையைப் படித்து மறந்துவிடுவதுதான் நல்லது என்று முடித்திருந்தார் ராமையா (தமிழில் சிறுகதை - வரலாறும் வளர்ச்சியும் *- சிட்டி சுந்தரராஜன் பக்.205 - 206). க.நா,க.வும் சி.சு. செல்லப்பாவும் சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழில் சிறுகதை வளர்ச்சி தேக்கமடைந்துவிட்டது என்று கூறியதற்கான காரணத்தைச் சிட்டி தம் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது கு.ப.ரா.1944இல் அமரராகிவிட்டார், பிச்சமூர்த்தி ஆலய நிர்வாக உத்தியோகம் பார்க்கப் போய்விட்டார், சிட்டி வானொலியில் சேர்ந்துவிட்டார், - ராமையாவும் புதுமைப்பித்தனும்