பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் -பட்ட கதைகளையும் எழுதியுள்ளார் என்று வாசகர்களுக்கு மறைமுகமாகச் சுட்டிக்காட்டவே, தேசிகன் இவ்வாறு எழுதியுள்ளார் என்று தெளிவாகிறது. ஆனால் அவரது இந்தக் கண்டு பிடிப்புகள்' உண்மையானவைதானா? முதலாவது பொன்னகரத்து அம்மாளுவை, விக்டர் ஹியூகோவின் பாண்டைன் என்ற கதாபாத்திரத்தில் இனம் கண்ட தேசிகனின் பார்வை! சரிதானா என்று பார்ப்போம். - தேசிகன் குறிப்பிட்டுள்ள பாண்டைன் என்ற கதாபாத்திரத்தை நானும் அறிவேன். ஹியூகோலின் உலகப் பிரசித்தி பெற்ற நாவலான 'ஏழைபடும்பாடு' (Les Miserables) என்ற நாவலில் வரும் முக்கியமான, மறக்க முடியாத, உருக்கமான, தாய்ப்பாசத்துக்கு உதாரணமான கதாபாத்திரம் அவள். பாரீஸ் நகருக்குப் படிக்கலந்த நான்கு இளைஞர்கள் அங்குத் தமக்கு ஆளுக்கொருத்தியாக நான்கு இளம் பெண்களை வசக்கி, அவர்களைத் தமது ஆசை நாயகியராக்கி வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் ஓர் இளைஞனுக்கு ஆசை நாயகியாக இருந்தவள்தான் பாண்டைன். சமூகத்தின் அடித்தட்டு வர்க்கத்தில் சேரியில் பிறந்து, தன் தாய் தந்தையர் யாரென்றே அறியாத அனாதையாக வளர்ந்தவள் அவள். பத்து வயதில் அவள் வயல்களில் கூலிவேலை செய்து வயிற்றைக் கழுவினாள். பதினைந்து வயதில் 'நல் வாழ்க்கை ' கிட்டும் என்ற நம்பிக்கையோடு அதனைத் தேடிப் பாரீசுக்கு வந்தாள். வறுமையில் வாடியவளானாலும் அவள் நல்ல அழகி. இடுப்பு வரை வளர்ந்து தொங்கிய நீண்ட பொன்னிறமான கூந்தலும், முத்துப்போன்ற பற்களும் அவளது அழகுக்கு மேலும் அழகூட்டின. பாரீஸிலும் அவள் உழைத்துத்தான் ஜீவித்து வந்தாள். அப்போதுதான் மேற்கூறிய வாலிபனின் உறவு அவளுக்குக் கிட்டியது. அவள் உண்மையிலேயே அவனைக் காதலித்தாள். ஆனால் அவனோ அவளை ஒரு போகப் பொருளாகவும் பொழுது போக்குக் கருவியாகவும் மட்டுமே பயன்படுத்தி வந்தான். மேலும் அவன் தன் படிப்பு முடிந்து ஊருக்குத் திரும்பும் போது, அவளை ஏமாற்றிவிட்டு ஓடிப்போய்விட்டான்: அவனது உறவால் அவள் கர்ப்பம் தரித்திருந்தாள். பின்னர் அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அவள் கோஸெட் என்று பெயரிட்டிருந்தாள்.