பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் - கண்டிருப்பதாகவும், அதற்குச் சிகிச்சை அளிக்க நாற்பது பிராங்குகளை உடனே அனுப்பக் கோரியும் பாண்டைனுக்குத் தெனார்டியர் தம்பதியரிடமிருந்து கடிதம் வருகிறது. அப்போது அவளிடம் பணமில்லை. அந்த வேளையில் மோசமான பற்களை எடுத்துவிட்டு, நல்ல பற்களைக் கட்டிவிடும் நாட்டு வைத்தியன் ஒருவன் அங்கு வருகிறான். பாண்டைனின் முத்துப்போன்ற பற்களைக் கண்டு பரவசமடைந்த அவன், 'உன் முன் பற்கள் இரண்டை எடுத்துக்கொள்ள இசைந்தால், உனக்கு நாற்பது பிராங்குகள் தருகிறேன்' என்று பாண்டைனிடம் ஆசை காட்டுகிறான். விஷக்காய்ச்சல் உயிருக்கே ஆபத்தானது என்று கேள்விப்பட்ட பாண்டைன், இறுதியில் வேறு வழியின்றித் தன் பற்களைப் பிடுங்கிக் கொள்ளச் சம்மதிக்கிறாள். - பின்னர் ரத்தம் ஒழுகும் வாயுடன் அவனிட மிருந்து - நாற்பது பிராங்குகளைப் பெற்றுத் தன் குழந்தையின் சிகிச்சைக்கென அனுப்பி வைக்கிறாள். உண்மையில் அவள் குழந்தைக்கு விஷக்காய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை. அவளிடம் பணம் பிடுங்குவதற்காகவே தெனார்டியர் தம்பதியர் இவ்வாறெல்லாம் எழுதி வருகின்றனர். நாட்களும் மாதங்களும் வருடங்களும் ஓடுகின்றன. கோஸெட்டுக்காக பாண்டைன் கொடுக்க வேண்டிய 'கடனும்' ஏறிக்கொண்டேயிருக்கிறது. அந்தக் கடனை அடைத்துத் தன் பிள்ளையை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று தவிக்கிறாள் பாண்டைன். இந்நிலையில் வசதிபடைத்த, ஏழைகளின்பால் இரக்கச் சித்தம் கொண்ட நகரமேயர் மாடிலீன் என்பவர் (மாடிலீன் தான் 'ஏழை படும்பாடு' நாவலின் கதாநாயகனான ஜீன்வால்ஜீன்) அந்தக் கடனை அடைத்துக் குழந்தையை மீட்டுத்தர முன் வருகிறார். ஆனால் தெனார்டியர் தம்பதியரோ பிள்ளையை அனுப்பிவைக்க அதிகப் பணம் கேட்கின்றனர். அதையும் தர மாடீலீன் சம்மதிக்கிறார். ஆனால் அந்தச் சத்திரத்துத் தம்பதியரோ, அந்தப்பிள்ளை 'ஒரு பணம் காய்ச்சி மரம்' என்பதைப் புரிந்து கொண்டு மேலும் மேலும் பணம் கேட்டனரே ஒழிய, பிள்ளையை அனுப்பவே தயாராக இல்லை. பிள்ளையைக் காணாத ஏக்கத்தில் பாண்டைன் நோய்வாய்ப்பட்டுப்படுக்கையில் விழுகிறாள். தன் மகள் வருவாள், வருவாள் என்ற ஏக்கத்திலும், வராததால் ஏற்பட்ட ஏமாற்றத்திலும் தலித்து வந்த அந்தத் தாய் இறுதியில் இறந்தும் போகிறாள். ஹியூகோவின் கூற்றுப்படி நம் எல்லோருக்கும்