பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1 2 புதுமைப்பித்தன் கதைகள் பொதுவான தாயான பூமித்தாயிடம் பாண்டைன் திரும்பப் போய்ச் சேர்ந்து விட்டாள்.'. இதுதான் ஹியூகோவின் 'ஏழைபடும் பாடு' என்ற பெருநாவலில் ஐந்தில் ஒரு பகுதிப் பக்கங்களில் (சுமார் நூறு பக்கம்) காணப்படும் பாண்டைனின் சோக வரலாற்றின் சுருக்கமாகும். - - - பாண்டைன் தன் குழந்தையின்மீது கொண்டிருந்த தாய்ப்பாசத்தின் காரணமாக, குழந்தைக்குத் தேவையான கம்பளிச்சட்டைக்காகவும், பின்னர் விஷக்காய்ச்சலில் கிடப்பதாகக் கூறப்பட்ட அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பதற்காகவும், முதலில் தன் நீண்ட பொன்னிறக் கூந்தலையும், பின்னர் தன் முத்துப்போன்ற பற்களையும் விற்றுவிட்டாள் என்ற ஒரு சம்பவத்தை ஒப்புமையாகக் கண்டு, பாண்டைன் என்ற கதா பாத்திரத்தைக் களவாடித்தான் புதுமைப்பித்தன் தமது அம்மாளு என்ற கதா பாத்திரத்தைப் படைத்துக் கொண்டார் என்று கூற முயல்வதில் நியாயமுண்டா ? ஒரு பெண் தன் குழந்தைக்காகத் தன் கூந்தலையும் பற்களையும் விற்பதற்கும், 'கற்பு 'என்பது பெண்கள் என்றென்றும் எந்நிலையிலும் காத்து வர வேண்டிய செல்வம்' என்ற கருத்தைக் காலம் காலமாகப் பலவிதத்திலும் உருவேற்றி வந்துள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருத்தி, தன் கணவனுக்குப் பால்கஞ்சி காய்ச்சிக் கொடுப்பதற்காகத் தன் 'கற்பையே விற்பதற்கும் வித்தியாசம் இல்லையா? எனவே தேசிகன் பாண்டைனை நினைவுபடுத்தி, புதுமைப்பித்தன் மீது தழுவல் குற்றம் சுமத்த மறைமுகமாக முயன்றிருப்பது அநியாயம் மட்டுமல்ல, அக்கிரமமும் ஆகும். இல்லையா? இனி 'பொன்னகரம்' கதைக்கு வருவோம். புதுமைப்பித்தன் இந்தக் கதையை எப்படி எழுதினார்? ஏன் எழுதினார்? பொன்னகரம் என்பது புதுமைப்பித்தன் வைத்த கற்பனைத் தலைப்பல்ல; கற்பித்த பெயரும் அல்ல. அது மதுரை நகரில் இன்றும் உள்ள ஒரு குடியிருப்பு வட்டாரம். அன்றைய ஹார்வி மில்லுக்கு (இன்றைய மதுரா கோட்ஸ் மில்) எதிரே. ரோட்டுக்கு வடபுறத்தில் ரயில்வே லைனையும் வைகை ஆற்றங்கரையையும் ஒட்டி, கரிமேடு என்று குடியிருப்பு, வட்டாரமும், அதற்கு மேற்கே மதுரை மத்திய - சிறைக்குப் பின்புறத்தில் பொன்னகரம் என்ற குடியிருப்பு வட்டாரமும் இன்றும் உள்ளன. புதுமைப்பித்தன் முப்பதுகளின் தொடக்கத்தில் பிறந்த வீடும், புகுந்த (மாமனார்) வீடும் தங்க முடியாமல், கட்டிய மனைவியையும் அழைத்துக் .