பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைப்பித்தன் கதைகள் கூறலாம். 'பாரதி அறுபத்தாறு' பகுதியில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் பாரதி பின் வருமாறு பாடியுள்ளான்; பேணுகின்ற காதலினை வேண்டி யன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார். * காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக் கற்புக்கற்பு என்றுலகோர் கதைக்கின்றாரோ (பாடல் 56) மேற்கண்ட பாடலின் நான்கு வரிகள்தான் புதுமைப்பித்தனின் பொன்னகரம்' கதைக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளன. கொண்ட கணவனின் மீதுள்ள காதலால்தானே, அவன் ஆசையோடு கேட்ட பால் கஞ்சியை அவனுக்குக் காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால்தானே அம்மாளுதன் கற்பை இழக்கிறாள். வாழ்க்கையில் இவ்வாறு நிகழ்கின்ற சம்பவங்களைக் காண மறுத்துவிட்டு, கற்பின் பெருமை' பற்றிக் கதை பேசிவரும் உலகை இடித்துக் காட்டுவதற்காகத்தான் புதுமைப்பித்தன் 'பொன்னகரம்' என்ற 'அதிர்ச்சி வைத்திய'க் கதையை எழுதியுள்ளார். மேலும் பாரதியின் மேற்கண்ட பாடலின் கடைசி இருவரிகளை நினைவூட்டும் விதத்தில்தான் 'என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே; இதுதான் ஐயா! பொன்னகரம்!' என்று இடித்துக்காட்டிக் கதையை முடிக்கிறார். இனி லெவலின் போவிஸ் எழுதியுள்ள ஒரு கதையைப் படித்துவிட்டு, அதனைத் - தழுவித்தான் புதுமைப்பித்தன். 'துன்பக்கேணி' கதையை எழுதியிருக்கிறார் என்று தேசிகன் சூசகமாக உணர்த்த முயன்றுள்ளதும் சரிதானா என்பதைப் பார்ப்பதற்கு முன் நான் இங்கு வேறொரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். 1940இல் தேசிகன் புதுமைப்பித்தன் கதைகள்' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையையும் தன்னுட் கொண்டு 1987இல் ஐந்திணைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, முன்னர் குறிப்பிட்ட புதுமைப்பித்தனின் மொத்தக் கதைகளின் தொகுப்புக்கு விரிவான முன்னுரை எழுதியுள்ள க.நா.சுப்பிரமணியம், புதுமைப்பித்தன் மீது தழுவல் , முத்திரை குத்தமுயன்ற தேசிகன் மற்றும் சிட்டி போன்றவர்களுக்கெல்லாம் மேலாக ஒரு படி சென்று பின்வருமாறு எழுதியுள்ளார். - 'பல மோபஸான் கதைகளைப் புதுமைப்பித்தன் தழுவி. 'ஊழியனில்' வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தழுவல் :