பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

288 ---- புதுமைப்பித்தன் கதைகள் - - - எழுதினவர்கள். அவர்களை இந்த ஆராய்ச்சியில் சேர்க்கத் தேவை இல்லை' என்றும் எழுதியுள்ளார். அவர் மேலும் எழுதுகையில் ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி ஆகிய மூன்று பத்திரிகைகளும் இந்தப் புது எழுத்துக்கு ஆதாரமாக இருந்தன என்றும், இவை - மூன்றிலும் - ஆனந்தவிகடன் 'நுனிப்புல் மேயும் மனப்பான்மை கொண்டது" - என்றும் - மணிக்கொடியின் மனப்பான்மை புரட்சி" என்றும் எழுதியுள்ளார். எவ்வாறாயினும் இந்தக் கூற்றும் தமிழில் புரட்சிகரமான மனப்பான்மை'யுடன் கூடிய எழுத்து மணிக்கொடி வாயிலாகத்தான் தோன்றியது. என்பதே கு.ப.ரா.வின் கணிப்பு என்பதைத் தெளிவாக்குகிறது.. சிறுகதை மணிக்கொடி எழுத்தாளர்களின் ஒட்டு மொத்தமான இலக்கியக் கொள்கை' எவ்வாறிருந்தது என்பதைப் பின்னர் பார்ப்போம். கு.ப.ரா.வின் மேற்கண்ட கூற்றும், தமிழில் புதிய இலக்கியம் என்பது சிறுகதை மணிக்கொடி எழுத்தாளர்களான தங்களுடனேயே 'தொடங்கியது என்ற ராமையாவின் சூசகமான கூற்றை 'ஒத்த கூற்றுத்தான் என்பது தெளிவு. தான் கண்ணைத் திறந்த பின்னர்தான் - உலகமே இருள் நீங்கி விடிந்தது என்று எண்ணிக் கொள்ளும் பூனையின் மனப்பான்மைதான் இது! போகட்டும், சமத்துவக் கருத்து பாரதிக்குப் பின் முதன் முதலாக மணிக்கொடியில் தான் இடம் பெற்றது என்ற ராமையாவின் கூற்று சரிதானா? சொல்லப் போனால், ராமையா 'வகுப்புவாத' சக்தியென்றும், 'பிற்போக்குச் சக்தி' யென்றும் முத்திரை குத்தியுள்ள ஈ.வே.ரா.வின் சுயமரியாதை இயக்கமே 'பார்ப்பனக் கவிஞ'னான பாரதியின் சமத்துவக் கருத்துப் பாடல்களை, மணிக்கொடிக்கு முன்பே பயன்படுத்திப் பரப்பியது எனலாம். பாரதி வரலாற்றாசிரியர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்: - "பாரதியைத் தமிழ் மக்கள் மீளக்கண்டு பிடித்துக் கொண்ட வரலாறு இந்த மண்ணில் வளர்ந்த இயக்கங்களின் வரலாறோடு இணைந்து கிடக்கிறது என்ற கூற்றில் 'இயக்கங்கள்' என்பது அரசியல் விடுதலை இயக்கங்களை மட்டிலுமே சுட்டுவதாகக் கொள்ளலாகாது. அந்தக் காலகட்டத்தில் சமூக முற்போக்குக் கோட்பாடுகளைக் கொண்டிருந்த எல்லா இயக்கங்களுமே பாரதி பாடல்களைப் பயன்படுத்த வேண்டியது ஒரு காலக் கட்டாயமாகியது. இது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இயக்கத்துக்கும் பொருந்தும், பெரியாருக்கு 'வைக்கம் வீரர்' என்ற பெயரைத் தேடித்தந்த அந்தப் புகழ்பெற்ற வைக்கம் ஆலய