பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

290 புதுமைப்பித்தன் கதைகள் என்கிற குறள்களும் அச்சிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர, அவ்வியக்கத்தின் கொள்கைப் பிரசாரக் கட்டுரைகளிலும் பாரதி பாடல்கள் தாராளமாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கலாம். 1925ஆம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி 22ந் திகதி இதழ்களில் வெளியாகியுள்ள எம்.ஏ. ஆண்டமுத்து கவுண்டர் எழுதியுள்ள 'தற்காலக் கல்வியிலுள்ள குறைகள்' என்ற கட்டுரை. ஒன்று பட்டாலுண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்கிற பாரதி பாடலோடு முடிவடைகிறது. 1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ந் திகதி இதழில் வரதப்பன் எழுதியுள்ள தீண்டாமை பற்றிய பாட்டொன்று வெளியாகியுள்ளது. 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சு' - என்று பாரதி பாடியது உண்மையாச்சு என்று அந்தப் பாடல் துவங்குகிறது. (பாரதி மறைவு முதல் மகாகவி வரை கா. சிவத்தம்பி, அ. மார்க்ஸ் . பக், 52 - 54), மேற்கண்டவற்றிலிருந்து தமிழில் ‘புதிய இலக்கியம்' என்பது மணிக்கொடியின் வாயிலாகவே தோன்றியது என்ற கருத்தும், அதன் வாயிலாகவே சமத்துவக் கருத்து முதன் முதலாக இடம் பெற்றது என்ற கருத்தும் உண்மைக்கு மாறானவை என்பது வெளிப்படை, இனி அதே முப்பதாம் ஆண்டுகளில் பொருளாதார விடுதலையை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் நடந்து வந்த பொதுவுடைமை இயக்கம் பற்றியும் சிறுகதை மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு எத்தகைய கண்ணோட்டம் இருந்தது என்பதைப் பார்ப்போம். சென்னை மாகாணச் சட்டசபைத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் சார்பில் மதுரை மாவட்டத்தில் தாம் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களைப் பற்றி, ராமையா 'மணிக்கொடி காலம்' நூலில் எழுதியிருக்கிறார் (அத். 26), அந்தத் தேர்தலின்போது காங்கிரசுக்கும் அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இத் தேர்தலின்போது தொழிலாளர் அதிகமாக வகிக்கும் பகுதிகள் அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட வேண்டும் என்பது உடன்பாடு. இதன்படி கோவைத் தொழிலாளர் பகுதி ஜீவானந்தத்துக்கு உரியதாக இருந்தது. ஆனால்