பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 புதுமைப்பித்தன் கதைகள் வெள்ளையர்களையும் குறிக்கும் உருவகச் சொற்களாகும். இந்நூலில் வெவ்வேறுவிதமான கதைகள் அடங்கியுள்ளன. அவற்றில் தேசிகன் கருத்தில் கொண்டுள்ள கதை 'எப்படி அது நிகழ்கிறது' என்ற கதையாகும். கதையின் சுருக்கம் இதுதான், - ஜெரால்டு லிட்டில் மோர் என்ற பத்தொன்பது வயதான மேலைநாட்டு இளைஞன் மதபோதகரின் மகள் ஒருத்தியைக் காதலிக்கிறான். அவளை மணந்து வாழ்வதற்குப் போதிய பணம் சம்பாதித்து வரும் நோக்கத்தோடு, அவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் தந்தையின் விருப்பத்துக்கும் மாறாக, ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா நாட்டில் ஓர் ஆட்டுப்பண்ணையில் வேலை பார்க்கச் செல்கிறான். அங்குப் போய்ச் சேர்ந்த பின்னர், அந்தப் பண்ணையில் வேலை பார்த்து வந்த வெள்ளை இளைஞர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று கறுப்பினப் பெண்களை 'வைத்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிய வருகிறது. கறுப்பினப் பெண்கள் பலரும் தம் கணவன்மார்களுக்கும் தெரிந்தே இத்தகைய உறவுகளை மேற்கொண்டிருக்கின்றனர். சில நாட்களில் லிட்டில்மோரும், வாம்பாய் என்ற கறுப்பினப் பெண்ணைக்கண்டு ஆசை கொள்கிறான். இந்த ஆசை நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. இறுதியில் ஒருநாள் அவன் அந்தப் பெண்ணின் கணவனிடமே பேசி, அவனிடம் பதினைந்து ரூபாய் கொடுத்து, அந்தப் பெண்ணை அன்றிரவில் தன் அறைக்கு வரவழைத்து. அவளோடு உடலுறவு கொள்கிறான். - மூன்று வாரங்கள் கழித்து அவனது உடல்நிலையில் சில மாற்றங்கள் தோன்றுகின்றன. ஆனால் அவன் தனக்கு எந்த நோயும் இல்லை என்று கருதி, டாக்டரிடம் செல்லாமலே இருக்கிறான். சில மாதங்கள் கழித்து அவனது உதடுகளிலும் வாய்க்குள்ளும் தொண்டையிலும் புண்கள் ஏற்பட்டு, வாயில் துர்நாற்றம் அடிக்கத் தொடங்குகிறது. இதன் பின்னரே அவன் நைரோபியிலுள்ள ஒரு டாக்டரிடம் செல்கிறான். அவரோ அவனைப் பரிசோதித்துவிட்டு, 'உனக்கு சிபிலிஸ் நோய் தொற்றியிருக்கிறது. அது உன் உடம்பு முழுவதும் பரவியிருக்கிறது. இதனைக் குணப்படுத்துவது மிகவும் அசாத்தியம். இது ஒரு சனியன் பிடித்த நாடு. இங்கு இந்த நோய் எங்கும் உள்ளது. இதனை ஐரோப்பியர்கள்தான் இங்குக் கொண்டு வந்தனர். இப்போது இது காட்டுத்தீயைப் போல் பரவிவிட்டது. நீ மாலையில் வந்தால் உனக்கு ஊசி போடுகிறேன், எனினும் உன்னைக்