பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3{}{} புதுமைப்பித்தன் கதைகள்

  • ஈடுபாடு', மற்றும் மணிக்கொடிப் பத்திரிகையின் வரலாறு இரண்டையும் குறித்து மாறி மாறி எழுதிச் சென்றிருக்கிறார். ஆனால் அந்த நூல் முழுவதையும் படித்துப் பார்க்கும் எவருக்கும், அவர் ஈடுபட்டிருந்த அரசியல் இயக்கத்துக்கும், அவர் வளர்க்க விரும்பிய இலக்கியத்துக்கும் சம்பந்தமுண்டு என்ற உணர்வே அவருக்குச் சற்றும் இருந்ததில்லை என்ற உண்மையே புலப்படும். இலக்கியத்தில் அரசியல் கலப்பு கூடாது என்பதே. ராமையா போன்றவர்களின் கருத்து நிலையாக இருந்தது என்றே வைத்துக் கொண்டாலும், இலக்கியத்துக்குக்கென்று - ஓர் அரசியல்' உண்டு, அதாவது இலக்கியத்துக்கு காலத்தின் குரலாகப் பயன்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு என்ற பிரக்ஞையோ, ஞானமோ. சிறுகதை மணிக்கொடி எழுத்தாளர்கள் பலருக்கும் இருந்ததில்லை என்பதே உண்மை நிலை. இது , அவர்களை இறுதியில் எங்குக்கொண்டு போய் நிறுத்தியது என்பதைப் பின்னர் பார்ப்போம்.

எவ்வாறாயினும், அரசியல் கலப்பற்ற சுத்த 'சுயம்புவான சிறுகதைப் பத்திரிகையாக மணிக்கொடியை மாற்றியதைக் குறித்து. ராமையா பின்வருமாறு பெருமைப்பட்டுக் கொண்டார்: கதைப் பதிப்பு இதழ்களுடன் ஏஜெண்டுகளுக்கு அனுப்பிய இதழ் விளம்பரப் போஸ்டர்களில் 'அவ்வ்வ்வ்வ்வ்வ ளவும் கதைகள்' என்று ஆறு 'வீ போட்டு, பத்திரிகையின் தனிச் சிறப்பை எடுத்துக்காட்டுவது வழக்கம்" (மணிக்கொடி காலம் - பக்.220). அவ்வாறாயின் தேசிய இயக்கத்தின் எழுச்சியால் ஏற்பட்ட பத்திரிகை உலக மறுமலர்ச்சியோடு உதித்த மணிக்கொடி, முற்றிலும் சிறுகதைப் பத்திரிகையாக மாற்றப்பட்ட பின், அதன் தேசிய இயக்க ஈடுபாடும், தேச விடுதலை லட்சியமும் என்னவாயின? ராமையாவின் வார்த்தைகளில் சொன்னால், மணிக்கொடி கதைப்பதிப்பு தொடங்கியதிலிருந்து பத்திரிகையின் அட்டையை இரண்டு அல்லது மூன்று வர்ணங்களில் இந்தியத் தேசியக்கொடி அலங்கரித்துக் கொண்டிருந்த தோடு அந்த ஈடுபாடு நின்றுவிட்டது. இடையிலே - 'பத்திரிகை நின்று போய் மறுபடி தொடங்கப்பட்டதிலிருந்து அட்டையில் இடம் பெற்று வந்த கொடி அலங்காரமும் நின்றுவிட்டது. அதற்கு மாறாக, "ஒவ்வொரு இதழிலும் அட்டையில் புதிதாக ஏதாவது படம் வர வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் திருப்திகரமாக நடக்கவில்லை (மணிக்கொடி காலம் - பக். 275 - 276). )