பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 19 குணப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை' என்று கூறிவிடுகிறார். (இதன் பின் தேசிகன் கூறியுள்ளதுபோல், இந்தக் கதை 'அவள் தந்தாள். அவன் வாங்கிக் கொண்டான்' என்று கூறி முடியவில்லை .) இதன்பின் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவந்த லிட்டில்மோர் இனி என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்க்கையிலேயே விரகதியடைந்து, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டுவிடுகிறான். அந்த டாக்டரும், கென்யாவுக்கு அவன் வந்து சேர்ந்த காலத்தில் அவனை வரவேற்றுக் கூட்டிச் சென்ற டாம்கின்ஸ் என்பவனும் அவனது சவ அடக்கத்தில் கலந்து கொள்கின்றனர். சவ அடக்கம் முடிந்து திரும்பிவந்த டாம்கின்ஸ் இவ்வாறு கூறுகிறான்; இங்கே ஒருவன் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்தப் பயல் என்னிடம் முதலிலேயே யோசனை கேட்டிருந்தால், நோய் இல்லாத ஒரு பெண்ணை இவனுக்கு ஏற்பாடு செய்திருப்பேன். என்றாலும் இங்கு இந்த நோயில்லாத பெண்களைக் கண்டறிவதே அபூர்வம்தான்!' போவிஸின் கதை. இவ்வாறுதான் முடிகிறது. இந்தக் கதைக்கும் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி'க்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கதையில் வரும் வெள்ளைக்கார இளைஞன் கறுப்பினப் பெண்ணிடமிருந்து பரங்கிப்புண்ணைப் பெறுகிறான். புதுமைப்பித்தனின் கதையில் கதாநாயகி மருதி. வெள்ளையர்கள் இலங்கையிலும் இறக்குமதி செய்திருந்த பரங்கிப் புண்ணைப் பெறுகிறாள். இந்த ஓர் ஒற்றுமையைத் தவிர, இரு கதைகளுக்கும் வேறு என்ன ஒற்றுமை காணமுடிகிறது? மேலும் 'துன்பக்கேணி' என்ற நெடுங்கதை இந்தப் பரங்கிப் புண் விஷயத்தையா மையமாகக் கொண்டுள்ளது? எனவே போவிஸின் கதையைத்தான் புதுமைப்பித்தன் தழுவி எழுதிவிட்டார் என்று தேசிகன் சூசகமாக உணர்த்த முயன்றுள்ளது விஷமத்தனம் அல்லாமல் வேறென்ன? உண்மையில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி' என்ற கதைக்கும் பாரதியின் பாடலொன்றே அடியெடுத்துக் கொடுத்துள்ளது என்று நாம் ஆதாரபூர்வமாகக் கூறலாம். பீஜித் தீவுகளிலுள்ள கரும்புத் தோட்டங்களில் பல்வேறு அவலங்களையும் துன்பங்களையும் அனுபவித்த தமிழ்நாட்டுப் பெண்களுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறி, பாரதி பாடியுள்ள 'கரும்புத்