பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைப்பித்தன் கதைகள் தோட்டத்திலே' என்று தொடங்கும் பாடலே, புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி' கதையின் தோற்றுவாயும், அதனை எழுதுவதற்கு உத்வேகம் அளித்த சக்தியும் ஆகும், நாட்டை நினைப்பாரோ? - எந்த நாளினில் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ? - அவர் - விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! - துன்பக் . கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ ?........ - என்று அந்தப் பாடலில் வரும் 'துன் பக்கேணி' - என்ற சொற்றொடரையே புதுமைப்பித்தன் தமது கதைக்குத் தலைப்பாக்கிக் கொண்டதிலிருந்தே இதனை அறியலாம். மேலும், இதனை வாசகர்களுக்கும் புரியவைப்பது போல், புதுமைப்பித்தன் தமது கதையை ராமையா காலத்து மணிக்கொடியின் முதல் இதழுக்கு எழுதிக் கொடுத்த காலத்தில், கதையின் முதற்பகுதியின் தலைப்பில், உழலையும் தொழிலையும் நிந்தனை செய்வோம் உண்டு களித்திருப்போரை வந்தனை செய்வோம் - பாரதியல்ல; உண்மை என்ற வரிகளையும் எழுதியிருந்தார். அவ்வாறே இந்த வரிகள் மணிக்கொடியிலும் அச்சாகி வெளிவந்தன. (மணிக்கொடி காலம் - பி.எஸ்.ராமையா, பக்.181), ஆனால் 'துன்பக்கேணி' நூல்வடிவம் பெற்ற காலத்தில், புதுமைப்பித்தன் இந்த வரிகளைப் புதுமைப்பித்தன் கதைகள்' என்ற 'கதைத் தொகுதிப் பதிப்பில் நீக்கிவிட்டார். பாரதியின் பாடல் வரிகளை இவ்வாறு தாம் மாற்றி எழுதியது சரியல்ல என்று அவர் பின்னர் கருதிவிட்டார் போலும். இதன் மூலம் பீஜித் தீவுகளில் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற தமிழ்ப் பெண்கள் அங்குப் படுமோசமாகச் சுரண்டப்பட்டும் அலங்கோலப்படுத்தப்பட்டும் வந்த அவலத்தைக் குறித்து, பாரதி பாடினான் என்றால், பீஜித்தீவின் கரும்புத்தோட்டத்துக்குப் பதிலாக. இலங்கைத் தேயிலைத் தோட்டத்தைத் தமது கதை நிகழும் களமாகக்' கொண்டும், அங்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் அவலங்களுக்கும் அலங்கோலங்களுக்கும் ஆளானதைக் கதையின் கருப்பொருளாகக்