பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் கொண்டும், பாரதியின் சொற்றொடரைப் பயன்படுத்தி, புதுமைப்பித்தன் தமது 'துன்பக்கேணி' கதையை எழுதியுள்ளார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பாரதியைப் போலவே புதுமைப்பித்தனும் ' கடல்தாண்டி அருகிலுள்ள இலங்கைத் தீவுக்குக்கூடச் சென்றவர். அல்லர், என்றாலும், இலங்கைத் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பெரும்பாலும் திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் முதலிய தென் தமிழ்நாட்டுச் சீமைகளைச் சேர்ந்த மக்களே பெருமளவில் கூலிகளாகப் பாடுபட்டு வந்தனர்; இன்னும் கூடப்பாடுபட்டு வருகின்றனர். இவர்களே இக்காலத்தில் இலங்கையில் மலையகத் தமிழர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர், எனலே திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த புதுமைப்பித்தன் , அங்கிருந்து பஞ்சம் பிழைப்பதற்காகவும், நிலபுலன்களை இழந்த நிலையில் பிழைப்புக்கு வழிதேடியும் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்குப் பணிபுரியச் சென்ற மக்கள் பட்ட அவதிகளைப் பற்றிக் கதை கதையாகக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதேபோல் திருநெல்வேலிச் சீமையிலிருந்து கொழும்பு நகரில் வியாபாரம் புரியச் சென்ற, சென்று திரும்பிய மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைமார் போன்ற உயர்சாதியார்கள் சிலரது கதைகளையும் அவர் கேட்டிருக்கக் கூடும். இந்தக் கேள்வி ஞானத்தினால்தான், ‘ஒருமுறை கொழும்புக்குச் சென்று விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்டசாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும்' என்று கனவு கண்டு, அந்தக் கனவை நனவாக்கிக் கொள்ளத் தைரியமில்லாமல் திரும்பி வந்துவிட்ட ஸ்டோர் குமாஸ்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றி, 'மனித யந்திரம்' என்ற கதையையும் (புதுமைப்பித்தன் கதைகள் ), கொழும்புவுக்கு வெறும் துண்டோடு சென்று, அங்கு ஒரு கடைச்சிப்பந்தியாக வாழ்க்கையைத் தொடங்கி, முதல் இல்லாமலே ஒரு லட்சம் ரூபாய் சரக்குக்கு உடைமையாளரான வடலூர் குமாருப்பிள்ளையைப் பற்றி ‘நியாயந்தான்' என்ற கதையையும் (காஞ்சனை தொகுதி) புதுமைப்பித்தன் எழுதியுள்ளார். மேலும் அவர் எழுதியுள்ள ‘நாசகாரக்கும்பல்' என்ற நெடுங்கதையும் இலங்கையிலிருந்த தமிழ்நாட்டவர்கள் பற்றி அவர் பெற்றிருந்த கேள்விஞானத்துக்கு ஒரு சான்றாகும். இதனால்தான் அக்கதையில், திருநெல்வேலித்'