பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 புதுமைப்பித்தன் கதைகள் - - - தாழ்த்தப்பட்ட வகுப்புக்களிடை கொழும்பு என்றால் இலங்கையின் ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் என்றுதான் பொருள். உயர்ந்த வேளாள வகுப்புக்களிடையேதான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்று அர்த்தம்' என்று அவர் எழுதியுள்ளார். - மேலும் இந்தியாவிலிருந்து, 'குறிப்பாகத் தமிழகத்திலிருந்து. ஆங்கிலேயர்கள் அக்கரைச் சீமைகளிலிருந்த தமது காலனி நாடுகளிலும் தீவுகளிலும் தமக்குச் சொந்தமாகவிருந்த, தேயிலை, ரப்பர், கரும்பு, வாழை, காப்பி முதலியவை பயிரான தோட்டங்களுக்கு, ஏழைப்பட்ட மக்களை ஒப்பந்தக் கூலிகளாய் அழைத்துச் சென்று அங்கு அவர்களைப் படுத்தியபாடுகளைக் குறித்துப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளையும், அவற்றை நேரில் கண்டறிந்து காந்தியடிகளின் தோழர் சி.எப். ஆண்ட்ரூசும், பியர்சன்னும் எழுதி வெளியிட்ட விரிவான அறிக்கையையும், ஏனையோர் பலரையும்போல், புதுமைப்பித்தனும் படித்தறிந்து, - ஒப்பந்தக்கூலிகளின் வாழ்க்கை நிலைமைகளை அறிந்திருக்கக்கூடும். இவ்வாறு தெரியவந்த விவரங்களையும், தாம் கேளவிப்பட்டறிந்த விவரங்களையும் அடிப்படையாகக் கொண்டே புதுமைப்பித்தன், துன்பக்கேணி' என்ற நெடுங்கதையை, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய 'இரு இலையும் ஒரு மொட்டும்' (Two leaves and a bud) என்ற ஆங்கில நாவலின் தகுதிக்கு இணையான கதையை எழுதியிருக்கிறார் என்பது தெளிவு. இவ்வாறு கதையின் கடைசி வரிகளிலும் (பொன்னகரம்), கதையின் தலைப்பிலும், தமக்கு இந்தக் கதைகளை எழுதுவதற்கு * உத்வேகச் சக்தியாக விளங்கியவர் பாரதியே என்று புதுமைப்பித்தன் தெள்ளத்தெளிவாக இனம் காட்டியுள்ளது. இந்தக் கதைகளைப் படித்தபோது தேசிகனுக்கு நினைவுக்கு வரவில்லையா? அல்லது இவ்வாறு இனம் காட்டியுள்ளது அவருக்குப் புரியாதா? தெரியாதா? அவருக்கு நன்றாகப் புரியும்; தெரியும். இவ்வாறு தெரிந்திருந்தும், அவர் இவ்விரு கதைகளும் மேலைநாட்டுக் கதாசிரியர்களின் கதாபாத்திரங்களையும், கதை நிகழ்ச்சிகளையும் - தழுவி எழுதப்பட்டவை என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்ட முற்பட்டது விஷமத்தனம் மட்டுமல்ல, விமர்சன நேர்மையற்ற செயலும் ஆகும். புதுமைப்பித்தன் கதைகளுக்குத் தேசிகன் எழுதிய முன்னுரை, 'புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியை முதன் முதலாக நூலாக