பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
கவந்தனும் காமனும்

'சிட்டி' என்ற பெ.கோ.சுந்தரராஜனும், யாழ்ப்பாணத் தமிழரான சோ. சிவபாத சுந்தரமும் சேர்ந்து, 'தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்' என்ற 367 பக்கங்கள் கொண்ட பெரு நூல் ஒன்றை எழுதி, 1989இல் வெளியிட்டுள்ளனர். 1978இல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய நான்கு சொற்பொழிவுகளின் விரிவாக்கமே இந்நூல், பொதுவாக, சிட்டி எந்தவொரு நூலையும் தனியாக எழுதுவதில்லை. அவரோடு நடத்திய பேட்டியொன்றில் 'கு.ப.ரா., தி.ஜா., சிவபாதசுந்தரம் என்று எப்போதுமே கோ-ஆதருடன் சேர்ந்தே முக்கிய நூல்களை எழுதியிருக்கிறீங்களே?' என்று இது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது, அவர் 'அதற்குக் காரணம் என் சோம்பல்தான். என்னால் பொறுமையாக உட்கார்ந்து நிறைய எழுதமுடியாது. ஆனால் தகவல்களைத் திரட்டுவது, ஒழுங்குபடுத்திப் பிரிப்பது. பிறகு கோலைப்படுத்தி அதனடிப்படையில் 'டிக்டேட்' செய்வது எல்லாம் எனக்கு சுலபம். அதுதான் காரணம்' என்று கூறியுள்ளார். (சுபமங்களா நேர்காணல். மே.1992) அதனால் மேற்குறிப்பிட்ட நூலில் கூறப்பட்டிருப்பவையும் நான் சிட்டியின் கருத்துகளே என்று எடுத்துக் கொள்கிறேன். (இந்த நூலில், இலங்கை மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றைச் சேர்ந்த சிறுகதை ஆசிரியர்கள், அங்கு நிகழ்ந்த சிறுகதை வளர்ச்சி மற்றும் வரலாறு ஆகிய விவரங்களை வழங்குவதில் மட்டுமே சிவபாதசுந்தரம் பெரும்பங்கு வகித்திருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்.)

பொதுவாக, இந்நூல் ஏராளமான தகவல்களையும், ஆதாரங்களையும் சேகரித்து, தமிழில் சிறுகதை வளர்ச்சியையும் வரலாற்றையும் விரிவாகக்கூறுகிறது என்ற முறையில், எல்லோரும் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை. என்றாலும், உதாரணமாக, மாதவையா எழுதிய கதை என்று கருதி, வேறொருவர் எழுதிய கதையொன்றைக் குறைகூறி, சி.சு.செல்லப்பா எழுதியுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டும் பகுதியில், 'தமிழில் திறனாய்வுகள், டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நுனிப்புல் மேயும் நிலையில்தான் இருக்கின்றன' (பக், 38) என்று குற்றம்