பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு.சி. ரகுநாதன்

29


புதுமைப்பித்தனால் தெரிந்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்டவை' என்று எழுதி, (முதலில் ஊழியன் பத்திரிகையில் வெளிவந்ததும், பின்னர் புதுமைப்பித்தனின் 'ஆறு கதைகள் என்ற தொகுதியில் இடம் பெற்றதுமான) புதுமைப்பித்தனின் 'செவ்வாய் தோஷம்' என்ற கதையை ஒரு தழுவல் கதை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்வினையாக நான் எழுதிய கட்டுரையில் (காலச்சுவடு - இதழ் 12; 1995) 'புதுமைப்பித்தன் உயிரோடு இருந்த காலத்திலேயே 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற நூலை வெளியிட்ட நவயுகப் பிரசுராலயம், இந்தத் தொகுதியைத் தொடர்ந்து 'ஆறு கதைகள்' என்ற தலைப்பில் புதுமைப்பித்தனின் ஆறுகதைகளை ஒரு நூலாகவும், மற்றும் ‘நாசகாரக்கும்பல்' என்ற நெடுங்கதையை அதே தலைப்பில் தனி நூலாகவும்' வெளியிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி புதுமைப்பித்தனால் தேர்வு செய்யப்பட்டு வெளிவந்த சிறுகதைத் தொகுதிகள் புதுமைப்பித்தன் கதைகள், காஞ்சனை, ஆண்மை ஆகிய மூன்று மட்டுமே என்று கூறுவது எப்படிச் சரியாகும் என்று கேட்டிருந்தேன். அத்துடன் 'செவ்வாய் தோஷம்' ஒரு தழுவல் கதை என்பது அவரது கண்டுபிடிப்பானால் அதன் மூலக்கதை எதுவென்று எனக்குத் தெரிவிக்குமாறும் கேட்டிருந்தேன்.

ஆனால் எனது கட்டுரைக்கு எதிர்வினையாக அவர் மீண்டும் எழுதிய கட்டுரையில் (காலச்சுவடு - இதழ் 13; 1996). 'செவ்வாய் தோஷம்' தழுவல் கதை என்றால், அதன் மூலக்கதை எது என்ற என் கேள்விக்குப் பதிலளிக்காமல், 'புதுமைப்பித்தனால் தேர்ந் தெடுக்கப்பட்டவை ஆண்மை, காஞ்சனை, புதுமைப்பித்தன் கதைகள் என்ற மூன்று தொகுதிகளும் என்றே கூறுகிறேன்' என்று முன்னர் கூறியதையே மீண்டும் கூறி, 'முதலிரு தொகுதிகளிலும் கதைத் தேர்விற்கான காரணங்களை அவரே கூறுகிறார். 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுதிக்கான கதைகளைத் தெரிவுசெய்வதிலும் அவருடைய பங்கு உண்டு என்ற தகவலை என்னால் பெற முடிந்தது' என்று எழுதியதோடு அவர் குறிப்பிட்டுள்ள மூன்று தொகுதிகளிலும், 'புதுமைப்பித்தன் தழுவல் கதைகளைப் புறக்கணித்துள்ளார் என்ற என் நிலைப்பாடு சரியானது தானே' என்று மார்தட்டித் தமக்குத் தாமே மாலை போட்டுக் கொள்கிறார். ' ஆறு கதைகள்' என்ற தொகுதியில் இடம் பெற்றிருந்த 'செவ்வாய் தோஷம்' என்ற கதையின் பிரசுர வரலாறு தெரியாமல், அதனைத் 'தழுவல் கதை' என்று அவர் முடிவு செய்துவிட்டதால் நேர்ந்த தவறான