பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 புதுமைப்பித்தன் கதைகள் - - - முடிவுதான், புதுமைப்பித்தன் தெரிவு செய்து வெளியிட்ட கதைத் தொகுதிகள் ஆண்மை, காஞ்சனை, புதுமைப்பித்தன் கதைகள் ஆகிய மூன்று மட்டுமே என்ற முடிவாகும். ஆண்மை , காஞ்சனை ஆகிய இரு தொகுதிகளிலும் 'புதுமைப்பித்தன் எழுதிய முன்னுரைகள் இடம் பெற்றிருந்தன. எனவே அவை புதுமைப்பித்தன் தெரிவு செய்த கதைகளே என்று தீர்மானிப்பதில் வேதசகாய குமாருக்குச் சிரமம் இருக்கவில்லை, ஆனால் புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியில் புதுமைப்பித்தனின் ஆசிரியர் முன்னுரை எதுவும் இடம் பெறவில்லை . அதனால் அவர் அந்தத் கதைகளைத் தெரிவு செய்வதிலும் புதுமைப்பித்தனுக்குப் பங்கு இருந்தது என்ற தகவலை'த் தம்மால் பெற முடிந்தது என்று கூறிச் சமாளிக்க முயன்றிருக்கிறார். வேதசகாய குமார் தமது ஆராய்ச்சியைத் தொடங்கிய 1975ஆம் ஆண்டுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப்பித்தன் கதைகள்; என்ற தொகுதியை வெளியிட்ட நவயுகப் பிரசுராலயம் அஸ்தமித்துப் போய் விட்டது; 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுதி வெளிவந்த காலத்தில் நவயுகப்பிரசுராலயத்தின் பதிப்பாசிரியராக இருந்த ப.ராமஸ்வாமியும் அப்போது உயிரோடு இருக்கவில்லை. இந் நிலையில் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுதிக்கான கதைகளைத் தெரிவு செய்வதில், புதுமைப்பித்தனுக்கும் பங்கு இருந்தது என்ற 'தகவலை' யாரிடமிருந்து பெற்றார் என்பது வேதசகாய குமாருக்கே வெளிச்சம்! - - ஆனால் 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தொகுதிக்கான கதைகளைத் தெரிவு செய்வதில் மட்டுமல்லாமல், நான் குறிப்பிட்ட ஆறுகதைகள், நாசக்காரக் கும்பல் ஆகியவற்றைப் பிரசுரத்துக்குத் தெரிவு செய்து திருத்தம் செய்து கொடுப்பதிலும் புதுமைப் பித்தனுக்குப் பங்கு இருந்தது என்பதற்கு அகச்சான்றுகளே உள்ளன, உதாரணமாக, புதுமைப்பித்தன் கதைகள் தொகுதியில் இடம் பெற்றுள்ள 'கவந்தனும் காமனும்' என்ற கதை வ.ரா. காலத்து மணிக்கொடிப் பத்திரிகையில் 22-7-1934 இதழில் வெளிவந்த காலத்தில், அந்தக் கதையில் வரும் பின் வரும் பகுதி கீழே 'கண்டவாறுதான் எழுதப்பட்டிருந்தது: 'அதோ மூலையில் சுவற்றருகில் பார்த்தாயா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீ போட்டிருக்கிறாயே, உன் பாப்ளின்ஷர்ட்டு; உன் ஷெல் பிரேம் கண்ணாடி எல்லாம் அவர்கள்