பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 31 வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான், அப்பா. ரொம்ப ஜம்பமாக, நாஜூக்காக கண்ணை மூட வேண்டாம் எல்லாம் அந்த வயிற்றுக்காக' - மூலப் பிரதியில் வாசகனை ஒருமையில் விளித்த புதுமைப்பித்தன் கதைத் தொகுதியில் மரியாதைப் பன்மையோடு விளித்து, சில சொற்பிழைகளையும் ' 'திருத்தியிருக்கிறார். தொகுதியில் இடம்பெற்றிருந்த இந்தப் பகுதி வருமாறு: 'அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. நீங்கள் போட்டிருக்கிறீர்களே, பாப்ளின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி!- எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, நாஸுக்காக கண்ணை மூட வேண்டாம்.. எல்லாம் 'அந்த வயிற்றுக்காகத்தான்' - (இதேபோல் அவர் அத்தொகுதியில் இடம்பெற்ற 'லிநாயக சதுர்த்தி' என்ற கதையிலும் சில திருத்தங்களைச் செய்திருந்தார். அவை என்ன என்பதை இந்நூலில் பிறிதோரிடத்தில் பார்ப்போம்). ஆறு கதைகள், நாசகாரக் கும்பல் ஆகிய நூல்களில் பதிப்புரையோ, முன்னுரையோ இடம் பெறாமல் புதுமைப்பித்தன் பார்த்துக் கொண்டது ஏன் என்பதை முந்திய அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறேன். அதில் நான் கூறியதை நம்பாவிட்டாலும், இவ்விரு நூல்களையும் தெரிவுசெய்து திருத்தம் செய்து கொடுப்பதில் புதுமைப்பித்தனுக்கும் பங்கு இருந்தது என்பதற்கும் அந்நூல்களிலேயே அகச்சான்றுகள் உண்டு. பத்திரிகையில் வெளிவந்த , காலத்தில், 'அபார்ஷன்' என்ற தலைப்பிலேயே வெளிவந்த கதை (இந்தக் கதை -புதுமைப்பித்தன் மரணத்துக்குப் பின்னால், 1953 ஏப்ரலில் தமிழ்சுடர் நிலையம் வெளியிட்ட' அவளும் அவனும்' என்ற தொகுப்பில் இந்த தலைப்பிலேயே வெளிவந்தது. 'ஆறுகதைகள்' என்ற தொகுதியில் கருச்சிதைவு என்ற புதுமைப்பித்தனின் - திருத்தத்தோடு கூடிய தலைப்பிலேயே வெளிவந்தது என்பது இதற்கொரு சான்றாகும். இதேபோல் 'நாசகாரக் கும்பல்' என்ற நெடுங் கதையை நவயுகப் பிரசுராலய வெளியீட்டுக்குத் திருத்தம் செய்து - கொடுத்ததிலும் புதுமைப்பித்தனுக்குப் பங்கு இருந்தது. பி.எஸ்.ராமையா காலத்து மணிக்கொடியில் 1.11,1937 இதழில் இக் கதை வெளிவந்த