பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 புதுமைப்பித்தன் கதைகள் நானும், புதுமைப்பித்தனும் அதை வைத்து ஆளுக்கு ஒரு கதை எழுத வேண்டுமென்று செய்த தீர்மானம் ஆகியவற்றை விளக்கி, ஹிந்துவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் என் கடிதம் பிரசுரமாகவேயில்லை . - 'எனக்குத் தெரியாமல் தேசிகனின் கூற்றுக்கு சிதம்பர சுப்பிரமணியமும் ஒரு மறுப்பு எழுதியனுப்பினார் என்று பின்னால் அறிந்தேன். -- அவருடைய மறுப்புக் கடிதமும் ஹிந்துவில் வெளிவரவில்லை .' (மணிக்கொடி காலம் - பக்.136 - 137). - மணிக்கொடி காலம் என்று --நூலை வேதசகாய குமாரும் அறியாதவர் அல்ல. 'மணிக்கொடி காலம் 1969, 70 களில் தீபம் இதழில் தொடராக வெளிவந்தது என்பதைத் தாம் அறிந்திருந்ததை. முன்னர் குறிப்பிட்ட அதே - கட்டுரையில் பிறிதோரிடத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வேதசகாய குமாரும் சரி, அவருக்கு ஆதாரமான சிட்டியும் சரி, 'மணிக்கொடி காலம்' என்ற நூலில் - மேற்கண்டவாறு கூறப்பட்டிருந்ததை மறந்து (அல்லது மறுத்து) விட்டது ஏன்?-பி. எஸ். ராமையா கூறியுள்ளதை அடியோடு மறைத்து, ‘கவந்தனும் காமனும்' ஒரு தழுவல்கதைதான், அதற்கு ஆதாரம் உள்ளது என்று கூறி, புதுமைப்பித்தனின் சொந்தக்கதை ஒன்றின் மீது தழுவல் முத்திரை குத்த விரும்பிய விருப்பமே இதற்குக் காரணம் என்று கூற முடியாதா? | ராமையா இந்துப் பத்திரிகையில் புதுமைப்பித்தன் கதைத் தொகுதிக்குத் தேசிகன் ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். அதில் 'கவந்தனும் காமனும்' ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ஓர் ஆங்கிலக் கதையின் தழுவல் என்று எழுதியிருந்தார் என்ற தகவலை மட்டுமே எழுதியிருந்தாரே தவிர, அந்த மதிப்புரை எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதையும் குறிப்பிடவில்லை. ஆல்டஸ் ஹக்ஸ்லியின் மூலக் கதையின் தலைப்பு என்ன என்பதையும் குறிப்பிடவில்லை . இவற்றை அவர் குறிப்பிடத் தவறியதற்கு அவரைக் குறை கூற இடமில்லை. ஏனெனில் அவரே 'மணிக்கொடி காலம்' 11ஆம் அத்தியாயத்தை பின்வருமாறே தொடங்கியுள்ளார்; 'இந்தக் கட்டுரைத் தொடரை நான் முழுவதும் ஞாபகத்தின் வலுவிலேயே எழுதி வருகிறேன். அந்தக் காலத்திய நாட்குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை .' எனவே ராமையா தேசிகனின் அந்த மதிப்புரை இந்துவில் எந்த ஆண்டில் அல்லது தேதியில் வெளிவந்தது; அதில் 'கவந்தனும்