பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 35 காமனும்' கதையின் மூலக்கதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லியின் எந்தக் கதையைத் தேசிகன் குறிப்பிட்டிருந்தார் என்ற முக்கியமான விவரங்களை அவரால் நினைவு கூர்ந்து எழுத முடியவில்லை. மேலும் ராமையாவே கூறியதுபோல் மணிக்கொடி காலம் என்ற நூல் நினைவுக் குறிப்புக்களே தவிர ஆராய்ச்சி நூலல்ல. எனவே, இந்த விவரங்களை ராமையா கூறாது விட்டது குறித்து அவரை நாம் குறைகூற முடியாது. ' ஆனால், தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் விரிவாக ஆராய்ந்து கூற முனைந்த ஒரு 'நூலை எழுதியுள்ள சிட்டி, பி. எஸ். ராமையா குறிப்பிட்ட 'இந்து'ப் பத்திரிகையின் மதிப்புரையைத் தேடிப்பார்க்கும் சிரமத்தை மேற்கொள்ளாமல். 'மணிக்கொடி காலம்' நூலில் கூறியிருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, தாம் எழுதிய பகுதியில், தாம் மிகவும் ஆதாரபூர்வமாக எழுதுவதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கோடு - பச்சையாகச் சொன்னால் ... வாசகர்களை ஏமாற்றும் நோக்கத்தோடு - 'புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியின் இரண்டாவது பதிப்பை (1955) விமர்சித்த ரா.ஸ்ரீ. தேசிகன்' என்று ராமையாவின் நூலில் கூறப்படாத ஒரு தகவலை' 'கூடுதலாகக்' கூறியதோடு நிறுத்திக்கொண்டு அந்த 'விமர்சனம்' இந்துப் பத்திரிகையில் வெளிவந்தது என்ற தகவலையும், இந்த 'விமர்சனத்தை' மறுத்து, ராமையா, இந்துப் பத்திரிகைக்குக் - கடிதம் எழுதியது போன்ற விவரங்களையும் மட்டும் வேண்டுமென்றே மறைத்து விட்டிருக்கிறார். . இதற்குக் காரணம் என்ன? புதுமைப்பித்தன் கதையின் முதற்பதிப்பு 1940 இல் வெளிவந்தது என்பதும், அதற்குத் தேசிகன் ஒரு முன்னுரை எழுதியிருந்தார் "என்பதும், அந்த முன்னுரையில் 'கவந்தனும் காமனும்' என்ற கதை ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதை ஒன்றை நினைவூட்டுகிறது என்றுகூடத் தேசிகன் எழுதவில்லை என்பதும், புதுமைப்பித்தன் கதைகளின் முதற்பதிப்பு வாசகர்கள் பலரையும் போலவே சிட்டிக்கும் தெரியும், எனவேதான், தேசிகன் அந்த முன்னுரையில் 'மேற்சொன்ன அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவில்லை, அன்று. - புதுமைப்பித்தனின் - இலக்கியப் புகழ் உச்சக் கட்டத்திலிருந்ததால் இத்தகைய : குறைபாடு ஒன்றைக் குறிப்பிடவேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை போலும்' என்று எழுதிவிட்டு, எனவே தேசிகன் புதுமைப்பித்தன் கதைகளுக்கு