பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 புதுமைப்பித்தன் கதைகள் விமர்சனம் எழுதியிருந்தால், அவர் இரண்டாவது பதிப்பையே விமர்சித்திருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டே, 'புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியின் இரண்டாவது பதிப்டை (1.955) விமர்சித்த தேசிகன்' என்று எழுதுகிறார். அதே சமயம் பொதுவாக இந்துப்பத்திரிகை எந்தவொரு நூலின் இரண்டாவது பதிப்புக்கோ, அதற்குப் பின்னர் வந்த பதிப்புக்களுக்கோ விமர்சனமோ,, மதிப்புரையோ எழுதுவதில்லை என்ற உண்மை தமக்குத் தெரிந்திருந்தது. என்பதால், அந்த விமர்சனம் வெளிவந்த பத்திரிகை எது என்பதை வாசகருக்குத் தெரிவிக்காமல், 'இந்து'ப் - பத்திரிகையின் பெயரையே கூறாது, அதனைப் புத்திசாலித்தனத்தோடு மறைத்துவிடுகிறார். இது நேர்மையற்ற செயல் அன்றி வேறென்ன? - சிட்டியின் நேர்மையற்ற செயலுக்கு. இங்கு இன்னொரு சான்றையும் நாம் எடுத்துக்காட்டலாம். தேசிகனின் விமர்சனத்தைக் குறிப்பிட்டு சிட்டி மேற்கண்டவாறு எழுதியுள்ள பக்கத்துக்கு (பக்.155) 25 பக்கங்கள் தள்ளி, 180-185 பக்கங்களில் ‘உறவும் பரிமாற்றமும்' என்ற உபதலைப்பின்கீழ், மணிக்கொடி எழுத்தாளர்கள் சிலரிடையே கதைகளைப் படைப்பதிலேயே கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன என்றும், இதன் விளைவாக அவர்களிற் சிலர் இரட்டைக் கதைகளை' எழுதினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உதாரணங்களாக, சிட்டி மணிக்கொடியில் 'அந்தி மந்தாரை' என்றும், 'இந்தக் கதையின் பொருளமைதிக்கு மறுபார்வையாக,' - கு.ப.ராஜகோபாலன் கலைமகளில் 'கனகாம்பரம்' என்றும் கதைகள் எழுதியதையும், இதேபோல் கு.ப.ரா. 'புரியும் கதை' என்ற தலைப்பில் ஒரு கதை எழுத, சிட்டி 'புரியாத கதை' என்ற தலைப்பில் வேறொரு கதையை எழுதியதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவரங்களையெல்லாம் எழுத முற்படு முன்பே, ஒரே விஷயத்தைப் பற்றி இருவர் இருவேறு கோணங்களில் கதைகள் எழுதியதற்கு உதாரணமாக, ‘ராமையாவும் புதுமைப்பித்தனும் ஒருநாள் சென்னைப் பட்டணத்தின் ஒதுக்குப்புறமான ஒரு சந்து வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது கண்ட ஒரு காட்சியை வைத்து இருவரும் வேறு வகையான கதைகளைப் புனைந்த செய்தியை ராமையா சொல்கிறார் என்று தொடங்கி, 'மணிக்கொடி காலம்' என்ற நூலில், பி.எஸ்.ராமையா தமது 'கார்னிவல்' என்ற கதைக்கும், புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும்' கதைக்கும் தோற்றக்காரணமாக விளங்கிய காட்சியைக்