பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அரை நூற்றாண்டுக்கு மேலாக அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் புதுமைப்பித்தன். மண்ணை விட்டு மறைந்தாரே தவிர மனங்களைவிட்டு, மறையாத மணிக்கொடி எழுத்தாளர், எழுத்துலகில் புகழ் பெற்று சாகித்ய அகடமி விருது பெற்ற திருமிகு தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் கதைகள் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் என்ற வரலாற்று அடிப்படையிலான அரியதொரு இலக்கிய ஆய்வு நூலை ஆக்கித் தந்துள்ளார்கள். இது தமிழ் கூறும் நல்லுலகுக்குச் செய்துள்ள மிகப் பெரிய தொண்டாகும். . . - சிறுகதை உலகில் புதிய தடம் வகுத்த புதுமைப்பித்தன் தழுவல் எழுத்தாளரா? புதுமைப்பித்தனின் படைப்பைக் குறைத்து, மதிப்பிட்டவர்கள் யார், யார்? புதுமைப்பித்தன் கதைகளை விமர்சனம் என்ற பெயரில் விஷமத்தனம் செய்தவர்கள் யார், யார்? அந்த விஷமத்தனங்களுக்குப் பின்னணி என்ன? 'திரித்தும் மறைத்தும் கூறப்பட்ட உண்மைகள் எவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விளக்கங்கள் தந்து ஆய்வு செய்யும் நூல் இது. புதுமைப்பித்தனின் பற்றாளர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் பல அரிய செய்திகளை அறிந்து கொள்ள இந்நூல் துணை செய்கிறது. இந்த நூல் புது மைப்பித்தன் கதைகளின் ஆழ அகலங்கள், அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அவரைப்பற்றிய பல எழுத்தாளர்களின் - கருத்துக்கணிப்புகள் எல்லாவற்றையும் தெளிவுப்படுத்துகிறது. இந்த ஒரு நூலைப்படிப்பதன் மூலம் பல நூல்களைப்படித்துத் தெளிவு பெற்றது போன்ற ஒரு தோய்ந்த நிலையை ஏற்படுத்தும். ஏனெனில் இந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பல நூல்களிலிருந்து திரட்டப்பட்டவை. இந்நூலைப் பல நூல்திரட்டாகப் படைத்துத்தந்த திருமிகு தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் போற்றுதலுக்குரியவர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்நூலை வியாபார லாபம் கருதி வெளியிடவில்லை . புகழுக்குரிய புதுமைப்பித்தன் மீது கூறப்பட்ட விஷமத்தனங்கள் களையப்பட வேண்டும் என்பதும் பெருமைக்குரிய ஒரு எழுத்தாளரின் புகழுக்கு மேலும் மெருகூட்ட வேண்டும் என்பதும்தான் எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நோக்கம். அந்த நல்லெண்ணத்தில் அச்சிட்டு வெளியிடப்படும் இந்நூலுக்கு வாசகர்களின் நல்லாதரவு பெருமளவில் இருக்கும் எனப் பெரிதும் நம்புகிறோம். - பதிப்பகத்தார். -