பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 37 குறித்தும், இரு கதைகளும் பிறந்த விதம் குறித்தும் (நாம் முன்னர் மேற்கோள்காட்டி) எழுதியுள்ள பகுதியில் (மணிக்கொடி காலம்-பக். 136-137) முதல் இரண்டு பாராக்களை மட்டும் சிட்டி மேற்கோள் காட்டி, 'புதுமைப்பித்தன் தாம் நேரடியாகக் கண்ட காட்சியை அப்படியே எழுதினார். ஆனால் ராமையா தமது கதையில் பணக்காரத் தாசியுடன் கார்னிவல் காட்சி பார்த்துவிட்டுத் திரும்பிய - மைனர், செம்புதாஸ் தெருசம்பவத்தில் ஒரு படி அதிகம் சென்றதாகக் காண்பித்தார்' (சிட்டி யின் நூல் பக்.184 - 185) என்று எழுதியுள்ளார். இங்கும் மேற்கூறிய ராமையாவின் மேற்கோள் பகுதியில், முதல் இரண்டு பாராக்களை மட்டுமே சிட்டி மேற்கோள் காட்டிவிட்டு, இதன் பின் வரும், 3,4,5 பாராக்களில், 'கவந்தனும் காமனும் ஒரு தழுவல் கதை என்று இந்துப் பத்திரிகையில் தேசிகன் எழுதியதை மறுத்து, பி.எஸ். ராமையாவும் சிதம்பர சுப்பிரமணியமும் “இந்து'வுக்கு மறுப்பு எழுதியது பற்றியுள்ள விவரங்களை, . சிட்டி முற்றிலும் மறைத்திருக்கிறார். இதுவும் புதுமைப்பித்தன் மீது தழுவல் முத்திரை குத்த - வேண்டும் என்ற முனைப்பில் செய்த நேர்மையற்ற செயலேயாகும். உண்மை நிலைதான் என்ன? முதலாவதாக, புதுமைப்பித்தன் கதைகளின் இரண்டாம் பதிப்பைப் பற்றிச்சிட்டி கூறும் 'தகவலே' தவறானது, புதுமைப்பித்தன் கதைகளின் முதற்பதிப்பு 1940 இலும், இரண்டாம் பதிப்பு 1947 இலும் வெளிவந்தன; இவை இரண்டும் நவயுகப் பிரசுராலய வெளியீடுகள். இதன் பின் அதன் மூன்றாவது பதிப்பு 1953 இலும், நான்காம் பதிப்பு 1955 இலும் வெளிவந்தன; இவை இரண்டும் ஸ்டார் பிர.சுர வெளியீடுகள், 1955-ஆம் ஆண்டு வெளிவந்த நான்காம் பதிப்பையே அவர் இரண்டாம் பதிப்பாகக் காட்ட முயன்றிருக்கிறார். உண்மையில் தேசிகன் 'இந்து'ப் பத்திரிகையில் எழுதியது என்ன என்பதை, மங்கிய நினைவின் காரணமாக, ராமையா 'மதிப்புரை' என்று எழுதியதும், சிட்டி 'விமர்சனம்' என்றும், வேதசகாயகுமார் மதிப்புரை' என்றும் எழுதியதும் தவறாகும். மேலும் தேசிகன் இந்துப் பத்திரிகையில் எழுதிய காலம் 1955ஆம் ஆண்டு என்று சிட்டி கூறியிருப்பது - முற்றிலும் தவறாகும். . . உண்மையில் தேசிகன் ‘கவந்தனும் காமனும்' என்ற கதை சம்பந்தமாக, இந்துப் பத்திரிகைக்கு எழுதியது ஒரு சிறு கடிதம்தான். அக் கடிதம் இந்துப் பத்திரிகையில் புத்தக விமர்சனப் பகுதியில்