பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 புதுமைப்பித்தன் கதைகள் Letter to the Editor என்ற தலைப்பின் கீழ் புதுமைப்பித்தன் 1948 இல் மறைந்து ஓராண்டுக்கும் மேலான பின்னர், 27.11.1949 அன்று வெளிவந்தது. இதுவரை எந்தவோர் ஆய்வாளரும் இந்தக் கடிதத்தைத் தேடி எடுத்து வழங்காததால் இதனை இதன் மூல வடிவத்திலேயே கீழே வழங்குகிறேன்: - Pudumaipithan's Stories Sir, I request that the attention of those who are interested both in Aldous Huxley and Puduniaipithan, may be drawn to Pudumaipithan's 'story 'கவந்தனும் காமனும்' and Aldous Huxley's 'Half - Holiday' (Two or three Graces) in Rotunda (Pages 614 to 632). The situation is lifted from that story; and the Concluding portion is almost a translation. It is I that wrote the introduction to his scories. I did not discover it then. R.S. Desikan இதன் தமிழாக்கம் வருமாறு: 'புதுமைப்பித்தன் கதைகள்' ஆல்டஸ் ஹக்ஸ்லி, புதுமைப்பித்தன் ஆகிய இருவரிடத்திலும் ஆர்வம் கொண்டுள்ளவர்களின் கவனத்தை, புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்' என்ற கதையின் பாலும் ரோட்டுண்டா வெளியீடான (Two or thrce (iraces) என்ற தொகுதியில் உள்ள ஆல்டஸ் ஹக்ஸ்லியின் Half-Holiday (பக்கங்கள் 614 முதல் 632 வரை) என்ற கதையின் பாலும் செலுத்துமாறு நான் வேண்டிக் கொள்கிறேன். கதைச் சம்பவம் , அந்தக் கதையிலிருந்து திருடப்பட்டுள்ளது; மேலும் முடிவுப் பகுதி கிட்டத்தட்ட ஒரு மொழிபெயர்ப்பேயாகும்.. அவரது கதைகளுக்கு முன்னுரை எழுதியவன் நான் தான். அப்போது நான் இதனைக் கண்டு பிடிக்கவில்லை . ரா.ஸ்ரீ. தேசிகன். தேசிகன் இந்தக் கடிதத்தில் புதுமைப்பித்தனின் "கவந்தனும் காமனும்' கதைச் சம்பவம் ஹக்ஸ்லியின் 'அரைநாள் விடுமுறை'