பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

soa| புதுமைப்பித்தன் கதைகள் வேண்டாம். அப்படி ஒன்றும் - இல்லை. ஒரு காலத்தில் என் கதைகளைப் போல, பத்திரிகைகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவை வேறு இருக்கவே முடியாது. நான் இப்பொழுது பிரசுரித்துள்ளவற்றின் அளவுக்கு ஏறக்குறையச் சமமான எணணிக்கையுள்ள கதைகள், அவை எழுதப்பட்ட காலத்திருந்த பத்திரிகைக் காரியாலயங்கள் எல்லாவற்றையும் க்ஷேத்திர தரிசனம் செய்துவிட்டுத் 'திரும்பியவையாகும். பிரசுரிக்கும் நோக்கமே இல்லாமல் நான் எழுதிக் கிழித்துப் போட்ட கதைகள் எத்தனையோ? எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்டயந்திரம் மாதிரி தானே ஓர் இடத்தில் வந்து நிற்கும், இது என் அனுபவம் (கலைமகள், ஆகஸ்டு 1942). - இதன் மூலம் தாம் பல கதைகளை எழுதி எழுதிக் கிழித்துப் போட்டுக் கதைகள் எழுதுவதில் பழக்கம் ஏற்பட்ட பின்னர்தான் பத்திரிகைகளுக்குக் கதைகளை எழுதிச் சிறுகதை எழுத்தாளராக மாறியதைக் கூறி, தாம் ஒன்றும் கருவிலேயே திருவுடையவனாகப் பிறந்த பிறவிக் கலைஞன் அல்ல என்று தன்னடக்கத்தோடு ஒளிவுமறைவின்றிக் கூறியுள்ளார். பி.எஸ்: ராமையாவின் ‘மலரும் மணமும்' என்ற கதை ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெறத் தவறியது குறித்து, சிட்டி. தமது நூலில் “ஏற்கெனவே ராமையாவின் சிறுகதைகளை மற்றைய சஞ்சிகைகளில் படித்து ரசித்தவர்களுக்கு, அவர் இந்தப் போட்டியில் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படாதது வருத்தத்தைத் தந்தது. பரிசு பெற்ற மூவரில் ராமையாவின் பெயர்தான் பெரும்பான்மையான வாசகர்களுக்கும் அறிமுகமான பெயர் (தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும் - பக் 87 - 88.) என்று எழுதியுள்ளார்.. இதிலிருந்து ராமையா 'மலரும் மணமும்' கதைக்கு முன்பே பல கதைகளை எழுதியுள்ளார் என்று புலப்படுகிறது. ஆனால் ராமையாவோ அந்தப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்ற 'மலரும் மணமும்' தான் தமது முதல் சிறுகதை என்று கூறியிருக்கிறார் (மணிக்கொடி காலம் - பக்.15). -- இதேபோல் ந.பிச்சமூர்த்தியும் 1933 இல் கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 'முள்ளும் ரோஜாவும்' என்ற கதையையே தமது முதல் கதை எனக் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும். இதற்கு முன்பே, அவரது 'விஞ்ஞானத்திற்குப் பலி' என்ற கதை அதே