பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 79 (Half Hyliday) என்ற கதையிலிருந்து திருடப்பட்ட தேயாகும் என்றும், முடிவுப்பகுதி கிட்டத்தட்ட ஒரு மொழிபெயர்ப்பேயாகும் என்றும் - எழுதியுள்ளதன் மூலம், அவர் - நேரடியாகவே புதுமைப்பித்தன் மீது இலக்கியத் திருட்டுக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் என்பது நிதரிசனம். அவரது குற்றச்சாட்டு சரிதானர், இல்லையா என்பதை இப்பகுதியில் பின்னர் பார்ப்போம்.. அதே சமயம் இந்தக் கடிதம் நான் முந்திய . அத்தியாயத்தில் எடுத்துக்காட்டிய தேசிகனின் உண்மை சொரூபத்தையும் அம்பலப்படுத்துகிறது. அதாவது முன்னுரை எழுதுவதற்காகப் புதுமைப்பித்தனின் கதைகளைப் படித்துப் பார்த்த காலத்திலேயே, புதுமைப்பித்தனின் மீது தழுவல் முத்திரை குத்த வழியுண்டா என்ற எண்ணத்தோடுதான் அவற்றைத் தேசிகன் படித்துப் பார்த்திருக்கிறார் என்பதும், அதன் காரணமாகவே அப்போது புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' கதை விக்டர் ஹியூகோவின் (ஏழைபடும்பாடு நாவலில் வரும்) பாண்டைன் என்ற கதாபாத்திரத்தின் கதையை நினைவூட்டுவதாகவும், 'துன்பக்கேணி' கதை லெவலின் போவிஸ் கதையை : நினைவூட்டுவதாகவும் விஷமத்தனமாக: எழுதி, புதுமைப்பித்தன் மீது மறைமுகமாகத் தழுவல் முத்திரை குத்த அவர் முயன்றிருக்கிறார் என்பதும் நமக்குத் தெளிவாகிறது என்பதோடு, புதுமைப்பித்தன் மறைந்த பின்னால் மறுவருடமே அவர் புதுமைப்பித்தன் மீது நோடியாகவே இலக்கியத் திருட்டுக் குற்றத்தைக் கூறத் துணிந்திருக்கிறார் என்பதே அவ்வாறு அம்பலமாகும் உண்மை சொரூபமாகும், எனது இந்தக் கூற்றைப் பின் வரும் பக்கங்கள் உறுதிப்படுத்தும். - இனி ஆல்டஸ் ஹக்ஸ்லி எழுதியுள்ள 'அரைநாள் விடுமுறை' என்ற கதையைப் பார்ப்போம். அந்தக் கதை மூன்று பக்கத்தில் முடிந்துவிட்ட புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும்' கதையைப் போல் அல்லாமல், பதினேழரைப் பக்கங்கள் கொண்ட நீண்டதொரு கதையாகும். எனவே அந்தக் கதையின் சுருக்கத்தையும், புதுமைப்பித்தன் காப்பியடித்ததாகத் தேசிகன் குறிப்பிட்டுள்ள கதையின் இறுதிப்பகுதியையும் கீழே வழங்குகிறேன். அந்தச் கதைச்சுருக்கம் வருமாறு; அன்று சனிக்கிழமை; அரைநாள் விடுமுறைநாள், அப்போது வசந்த பருவம், லண்டன் நகரில் ஹைட்பார்க் பூங்காவில் காதலர்கள்