பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

புதுமைப்பித்தன் கதைகள்



கைகோத்து உலவினர். பொதுவாக அந்த வசந்த காலம் பிற்பகல் பொழுது இதயத்தில் சரச எண்ணங்களை எழுப்புவதாக இருந்தது. பூங்காவில் அலைந்து திரிந்த பீட்டர் என்ற இளைஞனை அந்தப் பொழுது மிகவும் பாதித்தது. அவன் தன் தனிமையை அதிகமாக உணர்ந்தான். அவன் ஓர் ஆபீசில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன். அதனால் அவனுக்குத் தனது சுருங்கிப் போன சூட்டையும், பிதிர்ந்து போன பூட்சையும் புதுப்பித்துக்கொள்ள வசதியில்லை . மேலும் அவன் அழகனுமல்ல. குட்டையானவன். முகத்தில் மலிவான மூக்குக் கண்ணாடியும் பருக்களும் வேறு, திச் வாய் வேறு. என்றாலும், இந்த மாதிரி வேளைகளில் அவன் கற்பனைகளில் ஈடுபட்டுச் சுகம் காண்பதே வழக்கம். அதாவது ஒரு பெரிய மனிதர் வீட்டுப் பெண் கல்தடுக்கிவிழ அவளைக் காப்பாற்றி அவள் அன்பைப் பெறுவது, அல்லது குளத்தில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றி அதன் தாயின் அன்பைப் பெறுவது, அல்லது தன்னைப்போல் தனிமையில் வாடும் ஒரு பெண்ணைச் சந்தித்து அவள் காதலைச் சம்பாதித்துத் திருமணம் செய்துகொள்வது என்ற ரீதியில் அவனது கற்பனைகள் ஓடும். ஆனால் உண்மையில் இவ்வாறு எதுவும் அவன் வாழ்க்கையில் நடக்கவில்லை. யாரிடமும் தயக்கமின்றிப் பேச அவனது திக்குவாயும் இடைஞ்சலாக இருந்தது. இந்நிலையில் ஆளரவமற்ற ஒரு பாதையில் தோற்றத்திலேயே செல்வச் செழிப்புமிக்க இரு பெண்கள் நடந்து செல்வதைப் பீட்டர் கண்டான். அவர்களோடு ஒரு கறுப்பு நாயும் வந்தது. அவர்கள் எளிதில் அடைய முடியாதவர்கள்தான். என்றாலும் பீட்டர் அவர்களைப் பின் தொடர்ந்தான். ஏதாவது ஒரு அதிசய நிகழ்ச்சி அவர்களது வாழ்வில் தன்னைப் புகுத்திவிடாதா என்ற நப்பாசை அவனுக்கு என்றாலும் அந்த நாய் வடிவத்தில் அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்தக் கறுப்பு நாயும்.. எதிரே வந்த வேறொருவரின் மஞ்சள் நிற நாயும் ஒன்றையொன்று முறைத்துச் சண்டையிடத் தொடங்கின. இந்நிலையில் பீட்டர் அந்த நாய்களின் * சண்டையில் குறுக்கிட்டு, கறுப்பு நாயைக் காப்பாற்ற முயன்றான், என்றாலும் அந்தக் கறுப்பு நாய்தான் அவனது கையைப் பலமாகக் கடித்துவிட்டது. ஒரு மட்டிலும் அவன் அந்த நாயைக் காப்பாற்றி அந்தப் பெண்களிடம் கொண்டு வந்தான். அவர்களில் கிசுகிசுத்த குரலில் பேசும் பெண் உங்களுக்குக் காயம் பட்டுவிட்டது