பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

41



எளுங்கள் -னே மருக்குரலி போலிருக்கிறதே' என்று, இரங்கிக் கூறினாள். 'அது ஒன்றும் பெரிதில்லை' என்று சமாளித்தவாறே, கைக்குட்டையை எடுத்துச் காயத்தின் மீது சுற்றிக் கொண்டான் பீட்டர். கீச்சுக்குரலில் பேசும் இன்னொரு பெண் அவனிடம் 'உங்களுக்கு மிக மிக நன்றி' என்று கூறினாள். இல்லை யில்லை காயம் பெரிதாகத்தான் இருக்கிறது: நீங்கள் மருத்துவரிடம் சென்று, கிருமி நாசினி மருந்துபோட்டுக் கையில் கட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும்' என்று கூறினாள் கிசுகிசுக் குரலி. இதன்பின் அந்தப் பெண்கள் இருவரும் அவனுக்குப் புரியாத அன்னிய மொழியில் தணிந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டனர். இதற்குள் கீச்சுக்குரலி தன் பர்சிலிருந்த ஒரு பவுண்டு நோட்டை அவன் கையைப் பிடித்துத் திணித்துவிட்டு அவனிடம் 'குட்பை' கூறினாள். கிசுகிசுக்குரலி அதற்குள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள், பீட்டர் கீச்சுக்குரலியிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் அவனது திக்குவாய் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. கீச்சுக்குரலி அவன் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, 'உடனே மருத்துவரிடம் சென்று மருந்து போட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று முன்னே சென்றுவிட்ட் தோழியுடன் சேர்ந்து கொண்டாள். . 'அவன் பணத்தை ஏற்றுக் கொண்டானா? என்று கேட்டாள் கிசுகிசுக் குரலி. 'ஆமாம் ஆமாம்' என்று கீச்சுக் குரலில் கூறி விட்டு, 'இந்த நாய்ச்சண்டை குறுக்கிடுவதற்கு முள் உன்னிடம் நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?' என்று பேச்சை மாற்றினாள். . பீட்டர் அவர்களைப் பின் தொடர விரும்பினான்; ஆனால் தொடரவில்லை. அவர்களைச் சந்தித்தால் ஏதாவது கூற முனைந்தால் மேலும் அவமானம்தான் ஏற்படும். ஒருவேளை அவர்கள் தான் கூடுதலாகப் பணம் எதிர்பார்ப்பதாக நினைத்து, மேலும் ஒரு பவுண்டு நோட்டைக் கையில் திணித்துவிட்டுப் போய்விட்டால்........ ஆனால் அவன்து வழக்கமான கற்பனையேர் வேறுவிதமாக இருந்தது. அதாவது என்ன நடந்திருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அந்தக் கற்பனையின்படி, அவள் அவனது. கையில் நோட்டைத் திணித்தவுடன், அவன் புன்னகை செய்தவாறே அந்த