உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி.ரகுநாதன் 529 இவர்களுடன்தான் தமிழில் சிறுகதை இலக்கியம் உருப்பெறுகிறது. என் அபிப்பிராயத்தில் பின்னர் வந்த ஆண்டுகளில் லா.ச.ராமாமிருதம் என்று ஒரு பெயரையும் இந்தத் தரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நால்வரின் தரத்தை மற்றத் தமிழ் சிறு கதாசிரியர்கள் எட்டவில்லைஎன்பது எனக்கு வெளிபடையாகத் தெரிகிறது" என்று இந்த நால்வரையுமே தமிழ்ச் சிறுகதையில்வெற்றி பெற்றவர்கள் எனக் க.நா.சு. அங்கீகரித்திருந்தார். இதன்பின் "முப்பதுகளில் உருவானவர்கள் என் அபிப்பிராயத்தில் ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, ந.சிதம்பரசுப்பிரமணியன். த.நா. குமாரஸ்வாமி, தி.ஜ. ரங்கநாதன் இவர்களைச் சொல்வேன். நாற்பதுக்களில் உருவானவர்கள் என்று கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன் இருவரையும் சொல்வேன். ஐம்பதுக்களில் உருவாகத் தொடங்கி எழுத்தளவிலே கருகிவிட்டவர் என்று ஜெயகாந்தனையும். அதிகமாக எழுதாதனால் தப்பியவர் என்று சுந்தர ராமஸ்வாமியையும் சொல்லுவேன். முப்பதுகளில் ஐந்தாறுபேர்,நாற்பதுகளில்இரண்டு, ஐம்பதுகளில் இருவர் என்று வந்த சிறுகதை, ஐம்பது மத்திக்குப் பிறகு அறுபத்தைந்து வரையில் ஒரு பத்தாண்டுக் காலத்தில் இந்தத்தரமான ஒரு சிறுகதாசிரியரைக்கூட என் படிப்புக்கு எட்டுகிறவரையில் சொல்ல இயலவில்லை என்றும் அவர் எழுதியிருந்தார். முப்பதுகளுக்குப் பின்னர், முப்பதாண்டுக் காலத்தில் சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, 1965 வாக்கில் ஒன்றுமே இல்லாமல் சூன்யமாகப் போய்விட்டது என்பதுதான் அவரது அப்போதைய கருத்தாக இருந்தது என்பது தெளிவு. ஆனால் அவர் தமது அந்திமகாலத்தில் மேற்கூறிய கருத்தையும் மாற்றிக் கொண்டுவிட்டார் என்பது 1987 இல் அவர் புதுமைப்பித்தன் கதைகளின் மொத்தத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையின், முடிவுப்பகுதி மூலம் தெரிய வருகிறது. அந்த முடிவுப்பகுதியின் தொடக்கவரிகள் வருமாறு: புதுமைப்பித்தன் வகுத்துத் தந்த பாதையில் தமிழ்ச் சிறுகதை வெகுதூரம் அவருக்குப்பின் இந்த நாற்பது ஆண்டுகளில் வளம்பெற்று நடைபெற்று வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஓரளவில் அந்த வளத்தைச் சாத்தியமாக்கியவர் என்பதற்காகவேனும் புதுமைப்பித்தனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள்' (பக்.Lxxy)