பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

530 புதுமைப்பித்தன் கதைகள் ஏறத்தாழ முப்பதாண்டுக் காலமாக, தமிழ்ச் சிறுகதை உலகம் பற்றியும், புதுமைப்பித்தனைப் பற்றியும் தாம் செய்து வந்த தவறான மதிப்பீடுகளைக் கைவிட்டு, தமது அந்திமகாலத்தில் நிதரிசனமான உண்மைகளை நேர்மையோடு ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு அமரராகிவிட்ட க.நா.சு.வுக்கும் நாம் நன்றி செலுத்தத்தான் வேண்டும். புதுமைப்பித்தனின் மேதைமையையும் சாதனைகளையும் குறைத்து மதிப்பிட்டவர்களில் எஞ்சியுள்ள வேறு சிலரும் இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்க முன்வருவார்களா என்பதே இப்போது மிஞ்சி நிற்கும் கேள்வி. முற்றும்.